இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளாக இன்று சற்று சரிவில் தொடங்கி, பின் ஏற்றம் கண்டு முடிவில் மீண்டும் சரிவில் முடிவடைந்துள்ளது.
இது நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் முதலீட்டாளர்கள் தங்களது ஆர்டர்களை அடுத்த கான்ட்ராக்டுகளில் ரோல் ஓவர், லாபத்தினை புக் செய்தல் உள்ளிட்ட பல காரணங்களுக்கான விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று சந்தையில் ஏற்ற இறக்கமானது தொடர்ந்து காணப்பட்டது.
எனினும் முடிவில் சென்செக்ஸ் 90.99 புள்ளிகள் குறைந்து, 57,806.49 புள்ளிகளாகவும், நிஃப்டி 19.70 புள்ளிகள் குறைந்து, 17,213.60 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1969 பங்குகள் ஏற்றத்திலும், 1317 பங்குகள் சரிவிலும், 96 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
இதற்கிடையில் சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக பிஎஸ்இ மெட்டல்ஸ் மட்டும் 1% மேலாக சரிவில் முடிவடைந்துள்ளது. நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, நிஃப்டி ஐடி, பேங்க் நிஃப்டி பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஈச்சர் மோட்டார்ஸ், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, டிவிஸ் லேப், இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே ஐடிசி, எஸ்பிஐ, கோல் இந்தியா, கிரசிம், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, இந்தஸ் இந்த் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே எஸ்பிஐ வங்கி, ஐடிசி, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாக உள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தாக்கம் மத்தியில், நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம், பணவீக்கம், முதலீட்டாளர்களின் அச்சம் உள்ளிட்ட பல காரணிகள் சந்தைக்கு எதிராக உள்ளன. இதற்கிடையில் வரவிருக்கும் நாட்களிலும் இந்த நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications