இந்திய பங்கு சந்தையானது கடந்த இரு அமர்வுகளாகவே அமர்வுகளாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இன்று காலை தொடக்கத்திலும் கூட சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. ஆனால் முடிவில் சரிவில் முடிவடைந்தது.
குறிப்பாக சென்செக்ஸ் 190.97 புள்ளிகள் குறைந்து, 57,124.31 புள்ளிகளாகவும், நிஃப்டி 68.85 புள்ளிகள் குறைந்து, 17,003.75 புள்ளிகளாகவும் காணப்பட்டது.
சர்வதேச சந்தைகள் பலவும் இன்று விடுமுறையாதலால் பெரியளவில் மாற்றம் இல்லை. எனினும் இன்று வார இறுதியாதால் முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்திருக்கலாம். இதன் காரணமாக சந்தையானது சற்று சரிவில் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீடுகளில் நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் மட்டுமே மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. மற்ற அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் 1% கீழாக சரிவில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே கிரசிம், என்.டி.பி.சி, எம் & எம், ஈச்சர் மோட்டார்ஸ், ஐஓசி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே என்.டி.பி.சி, பவர் கிரிட் கார்ப், எம் & எம், ஆக்ஸிஸ் வங்கி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
அடுத்த வாரம் எப்படியிருக்கும்?
சர்வதேச நாணய நிதியம் தற்போது கொரோனாவின் தாக்கம் அவசர நிதிக்கான அணுகலை 18 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதற்கு சர்வதேச நிதிய குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது. இது மேற்கொண்டு நாடுகள் பொருளாதார சரிவில் இருந்து வர துணைபுரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் உள்ளதால் சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications