இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளாக இன்று சற்று ஏற்றத்தில் தொடங்கியது. இது பல்வேறு சாதகமான காரணிகளுக்கு மத்தியில் சந்தையானது முடிவிலும் ஏற்றத்தில் தான் முடிவடைந்தது.
தொடக்கத்தில் ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, முடிவில் சென்செக்ஸ் 477.24 புள்ளிகள் அதிகரித்து, 57,897.48 புள்ளிகளாகவும், நிஃப்டி 147 புள்ளிகள் அதிகரித்து, 17,233.30 புள்ளிகளாகவும் காணப்பட்டது.இதற்கிடையில் 2519 பங்குகள் ஏற்றத்திலும், 773 பங்குகள் சரிவிலும், 99 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
தொடர்ந்து இந்திய சந்தையானது இரண்டாவது நாளாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குட்ஸ், பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், நிஃப்டி ஆட்டோ,பிஎஸ்இ ஸ்மால் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் 1% கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, எம் & எம், அல்ட்ராடெக்சிமெண்ட், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, பவர் கிரிட் கார்ப், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, எம் & எம், அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே இந்தஸ் இந்த் வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் பங்கு மட்டும் டாப் லூசராக உள்ளது.
கவனிக்க வேண்டிய காரணிகள்
தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தாக்கம், எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி, முதலீடுகள் வெளியேற்றம், மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் உள்ளிட்ட பல காரணிகளுடன், இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications