நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கின. ஆனால் தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், முடிவிலும் சரிவில் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக சென்செக்ஸ் 31.12 புள்ளிகள் குறைந்து, 50,363.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 19.05 புள்ளிகள் குறைந்து, 14,910.45 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே 1449 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1463 பங்குகள் சரிவிலும், 174 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்யுஎல், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், சிப்லா, லார்சன், பிபிசிஎல்.ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்யுஎல், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே லார்சன், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, ஹெச் டி எஃப் சி வங்கி, ஹெச் டி எஃப் சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.49 ரூபாயாக தொடங்கிய நிலையில், முடிவில் 72.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications