ஏமாற்றம் தந்த இந்திய சந்தைகள்.. சரிவில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று காலையில் சரிவில் தொடங்கி, பின் ஏற்றத்தினை கண்டு, முடிவில் மீண்டும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது.

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்று அதிகளவு ஏற்ற இறக்கத்தினை கண்டு வந்தது.

ஒரு புறம் இந்தியாவில் தினசரி கொரோனாவின் தாக்கம் கடந்த சில தினங்களாகவே சரிவினைக் கண்டு வரும் நிலையில், அது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் சர்வதேச காரணிகள் சில சந்தைக்கு எதிராகவும் காணப்படுகிறது. அதோடு புராபிட் புக்கிங் காரணமாகவும் இந்த சரிவு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று சந்தை தொடக்கத்திலேயே சற்று சரிவில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 45.61 புள்ளிகள் குறைந்து, 50,147.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 18.90 புள்ளிகள் குறைந்து, 15,089.20 புள்ளிகளாகவும் தொடங்கியது. இதனையடுத்து சந்தையில் அதிக ஏற்றம் இறக்கம் காணப்பட்டது.

முடிவில் எப்படி?

முடிவில் எப்படி?

இதற்கிடையில் முடிவிலும் சற்று சரிவிலும் முடிந்தது. சென்செக்ஸ் 290.69 புள்ளிகள் குறைந்து, 49,902.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 77.95 புள்ளிகள் குறைந்து, 15,030.15 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதில் 1,743 பங்குகள் ஏற்றத்திலும், 1,249 பங்குகள் சரிவிலும், 166 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் கோல் இந்தியா, சிப்லா, சன் பார்மா, யுபிஎல், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா மோட்டார்ஸ், ஹெச்.டி.எஃப்.சி, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள சன் பார்மா, நெஸ்டில், டெக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பஜாஜ் பின்செர்வ், ஹெச்.டி.எஃப்.சி, எம்&எம், பார்தி ஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம்

ரூபாய் நிலவரம்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.14 முடிவடைந்தது. இது இன்று காலையில் 73.02 ரூபாயாக தொடங்கிய நிலையில், முந்தைய அமர்வில் 73.04 ரூபாயாக முடிவடைந்தது.

இன்று காலை தொடக்கத்தில் இருந்தே அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், ரூபாயின் மதிப்பும் சரிவில் முடிவடைந்ததுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+