நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தொடங்கின. தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்ட இந்திய சந்தைகள், முடிவிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
குறிப்பாக சென்செக்ஸ் 42.07 புள்ளிகள் அதிகரித்து, 49,201.39 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 45.70 புள்ளிகள் அதிகரித்து, 14,683.50 புள்ளிகளாகவும் முடிவடைந்தது.
இதற்கிடையில் 1654 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1176 பங்குகள் சரிவிலும், 179 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள, பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள்ஸ், பேங்க் நிஃப்டி தவிர, மற்ற குறியீடுகள் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் பவர் கிரிட் கார்ப், ஈச்சர் மோட்டார்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கிரசிம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே பவர் கிரிட் கார்ப், ஆக்ஸிஸ் வங்கி, இந்தஸிந்த் வங்கி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இந்திய ரூபாய் மதிப்பு
இதற்கிடையில் இன்று காலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.24 ரூபாயாக தொடங்கிய நிலையில், முடிவில் 73.42 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
கடந்த சில அமர்வுகளாகவே சந்தையானது சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகிறது. இது பரவி வரும் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
முதலீட்டாளர்கள் அச்சம்
மேலும் இந்தியாவில் தற்போது சில மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மீண்டும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுமோ என்றும் அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக முதலீடுகளும் குறையத் தொடங்கியுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனம்
அதோடு இந்திய ரிசர்வ் வங்கியில் நடப்பு நிதியாண்டிலும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல், அப்படியே வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் தடுப்பூசி பற்றிய அறிவிப்புகள் சந்தைக்கு சாதகமாக வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரும் வாரங்களில் சந்தையில் பிரதிபலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு கடைசி காலாண்டு அறிக்கையினை நிறுவனங்கள் வெளியிட ஆரம்பித்துள்ள நிலையில், இதுவும் வரும் நாட்களில் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications