280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 11,075-ல் நிஃப்டி!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய சந்தைகளுக்கு நெகட்டிவ் செய்திகள் மற்றும் உலக பொருளாதார காரணிகளால் வர வேண்டிய சறுக்கல்கள், நெருக்கடிகள் எல்லாம் கொஞ்சம் ஓய்ந்து இருப்பதாகத் தெரிகிறது. இதற்குப் பிறகு இந்திய சந்தைகள் மேம்பட ஏதாவது நல்ல செய்தி, அதுவும் பிரமாதமான மொமெண்டத்துடன் கூடிய நல்ல செய்தி வந்தால் தான் உண்டு. அதுவரை முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் அந்த செய்திக்காக காத்துக் கொண்டு இருக்க வேண்டும்.

இந்தியாவின் வாரன் பஃபெட் ராகேஷ் ஜுன் ஜுன் வாலா கூட முதலீடு செய்ய இது நல்ல நேரம் எனச் சொல்லி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே மக்களே நல்ல பங்குகளை வாங்கி சொத்து சேர்க்க விரும்புபவர்கள் தங்கள் முதலீடுகளை திட்டமிட்டு தேர்ந்து எடுத்துச் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜாக்கிரதையாக பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.

280 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்! 11,075-ல் நிஃப்டி!

இன்று காலை சென்செக்ஸ் 37,175 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,384 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 280 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,986 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,075 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 93 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 05 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 41 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,638 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,513 பங்குகள் ஏற்றத்திலும், 960 பங்குகள் இறக்கத்திலும், 165 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,638 பங்குகளில் 35 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 83 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றாத்தில் வர்த்தகமாயின. பார்மா இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், டைடன் கம்பெனி, கெயில், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், சன் பார்மா, ஹெச் டி எஃப் சி பேங்க், ஐடிசி போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.98-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.43 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex resisted at 37410 and nifty breached 11050 mark

closing bell: sensex resisted at 37410 and nifty breached 11050 mark
Story first published: Friday, September 13, 2019, 17:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X