இந்தியன் வங்கிகள் 139% நிகர லாபம் அதிகரிப்பு, பஜாஜ் ஆட்டோவில் நிகர லாபம் 22% அதிகரித்தது, எல் அண்ட் டி 7,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் பெட்ரோலியத்திடம் இருந்து பெற்றது, ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் சிறப்பாக வரும் என்கிற நம்பிக்கையில் பங்கு விலை அதிகரித்து இருப்பது என பல தனிப்பட்ட பங்குகள் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் சிறப்பாக வர்த்தகமாயின. இருப்பினும் சந்தை பெரிய எற்றங்களைக் காணவில்லை. ஒட்டு மொத்த சந்தையையும் தூக்கிப் பிடிக்கும் ரீதியில் எந்த ஒரு செய்தியும் இல்லாததும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.
ஒரு வேளை சந்தை நாளையும் இந்த டிரெண்டைப் பின் பற்றி ஏற்றம் கண்டால் கூட, 39,500 புள்ளிகளைக் கடப்பது பெரிய விஷயம் தான். காரணம் 39,500 லெவல்களை கடந்த ஜூலை 05-ம் தேதிக்குப் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் இந்த 39,500 லெவல்களைத் தொட்டதில்லை எனச் சொல்லி இருந்தோம். எனவே அந்த சப்போர்ட்டை அப்படியே வைத்துக் கொள்வோம். ஒருவேளை அதையும் மீறி நல்ல ஏற்றம் கண்டால், 39,500-ஐக் கடந்தால், அடுத்த டார்கெட் 39,750 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும். இன்னும் சென்செக்ஸின் வாராந்திர சார்ட்டைப் பார்க்கும் போது ஏற்றாத்துக்கான டிரெண்டு இன்னும் மாறுபட்டதாகத் தெரியவில்லை. எனவே இனி வரும் வர்த்தக நாட்களில், நல்ல காலாண்டு முடிவுச் செய்திகளை வைத்து சென்செக்ஸ் உயரும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே சொன்னது போல சென்செக்ஸ் 40,500 புள்ளிகளை இலக்காக வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 39,000 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கடந்த சில வாரங்களில், வெகு சில நாட்கள் மட்டுமே 39,000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் நிறைவு அடைந்து இருப்பதால், அதை வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே அடுத்த வலுவான சப்போர்ட்டாக 38,700-ஐ எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்லி இருந்தோம். அதை இப்போதும் அப்படியே வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை 38,700 உடைபட்டால், 38,500-ஐ அடுத்த சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.
நேற்று மாலை சென்செக்ஸ் 38,963 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,063 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 39,058 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 94 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது. இன்று காலை நிஃப்டி 11,596 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,604 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 15 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 19 பங்குகள் ஏற்றத்திலும், 11 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 30 பங்குகள் ஏற்றத்திலும், 20 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,687 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,223 பங்குகள் ஏற்றத்திலும், 1,262 பங்குகள் இறக்கத்திலும், 202 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,687 பங்குகளில் 70 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 156 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் தனியார் பேங்க், ரியாலிட்டி, மீடியா, மெட்டல் தவிர மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, பொதுத் துறை வங்கி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின.
ஹெச் சி எல் டெக், ஈஷர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, எஸ்பிஐ, டைடன் கம்பெனி போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதானி போர்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், வேதாந்தா, க்ராசிம் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.92-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.24 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications