இறுதி வர்த்தக நாளிலும் அள்ளிக் கொடுத்த சந்தைகள்.. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்..!

நடப்பு வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் இன்று காலையில் ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், முடிவிலும், முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.

குறிப்பாக சென்செக்ஸ் 307.66 புள்ளிகள் அதிகரித்து, 51,422.88 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 97.80 புள்ளிகள் அதிகரித்து, 15,435.65 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1394 பங்குகள் ஏற்றத்திலும், 1674 பங்குகள் சரிவிலும், 138 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.

இன்டெக்ஸ்கள்

இன்டெக்ஸ்கள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ கேப்பிட்டல் கூட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் கூட்ஸ், பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் முடிவடைந்துள்ளன. மற்றவை பச்சை நிறத்தில் முடிவடைந்துள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், கிரசிம், அதானி போர்ட்ஸ், எம்&எம், கோல் இந்தியா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ரிலையன்ஸ், எம்&எம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே சன் பார்மா, பஜாஜ் பின்செர்வ், நெஸ்டில், ஐசிஐசிஐ வங்கி,ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசராகவும் உள்ளன.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து 72.43 ரூபாயாக முடிவடைந்துள்ளது. முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.58 ரூபாயாக இருந்தது. இது 72.32 - 72.49 என்ற நிலையில் இருந்தது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஏனெனில் சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், எஃப்& ஓ புதிய காண்டிராக்ட் தொடங்கியுள்ள நிலையிலும், சந்தை புதிய உச்சத்தினை தொட ஆரம்பித்துள்ளது. சர்வதேச சந்தையில் பணவீக்கம் அதிகரிக்குமோ என்ற கவலையும் எழுந்துள்ளது. இதனால் வரவிருக்கும் நாட்களில் சந்தையின் போக்கு அதனை பொறுத்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+