இன்று காலை 36,525 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கிய சந்தை வர்த்தக நேர முடிவில் 550 புள்ளிகள் சரிந்து 35,975க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி இன்று காலை 11,007 க்கு வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 150 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.
பி.எஸ்.இ
பி.எஸ்.இ-ல் இன்று 1443 பங்குகள் ஏற்றத்திலும், 1220 பங்குகள் இறக்கத்திலும், 155 பங்குகள் மாறுதல் இன்றியும் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன. சென்செக்ஸ் தன் மாய எண்ணான 36,000 புள்ளிகளுக்குக் கீழ் வர்த்தகம் நிறைவடைந்திருப்பது ஒரு பெரிய மைனஸாகவே பார்க்கப்படுகிறது.
நிஃப்டி50
நிஃப்டியின் 50 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 36 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமானது. என்.எஸ்.இ சந்தையில் இன்று மதியம் 3.29 மணி அளவில் 172.59 கோடி பங்குகள் 39,023.87 கோடி ரூபாய்க்கு வர்த்தகமாகி இருக்கின்றன.
மற்ற இண்டெக்ஸ்கள்
சென்செக்ஸ், நிஃப்டி மட்டுமில்லாமல் பெரும்பாலான துறைவாரியான இண்டெக்ஸ்களும் இறக்கத்திலேயே வர்த்தகமாகி இருக்கின்றன. இந்திய சந்தைகளில் பட்டியல் இடப்பட்டிருக்கும் மொத்தப் பங்குகளில் 80 சதவிகிதப் பங்குகள் நேரடியாக தன் 100 நாள் மூவிங் ஆவரேஜ் புள்ளிகளை விட இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
இறக்கத்தில் ஏற்றம்
பல்ராம் பூர் சீனி, தாம்பூர் சுகர், நால்கோ, கதி லிமிடெட், ஹதவே கேபிள், டின்பளேட் மற்றும் இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட் போன்ற பங்குகள் 4 - 20 சதவிகிதம் ஏற்றம் கண்டு வர்த்தகமாயின.
மீண்டு எழுந்த ரூபாய்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 73.24ல் வர்த்தகமாகத் தொடங்கியது. அப்படியே இறக்கம் கண்டு 73.41 என்கிற தன் வாழ்நாள் இறக்கத்தை கடந்து விடுமோ என்று சந்தை பயந்து கொண்டிருந்த போது, எப்படியோ மீண்டும் ரூபாய் நிலை பெற்று தற்போது 73.24-லேயே வர்த்தகமாகி வருகிறது. இதனால் மொத்தம் 1.79 லட்சம் கோடி ரூபாயை மதிப்பில் இழந்து இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.


Click it and Unblock the Notifications