நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவில் தொடங்கி, முடிவிலும் சரிவிலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 871.13 புள்ளிகள் குறைந்து, 49,180.31 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது இதே தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 265.35 புள்ளிகள் குறைந்து, 14,549 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 13 பைசா குறைந்து 72.56 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது சந்தையில் செல்லிங் பிரஷர் அதிகம் இருந்த நிலையில், சற்று சரிவினைக் கண்டுள்ளது. இன்று காலையில் ரூபாயின் மதிப்பு 72.53 ரூபாயாக தொடங்கியது. இதே முந்தைய அமர்வின் முடிவு விலையானது 72.43 ரூபாயாகும்.
இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளும் சிவப்பு நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள சிப்லா, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, எம்&எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே எம்&எம் , எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச காரணிகள் பலவும் சந்தைக்கு எதிராக உள்ள அதே சமயம், நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரியும் இருப்பதால் இந்திய சந்தைகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்றும் கவனமாக வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ஒரே நாளில் ரூ14 லட்சம் கோடிக்கு மேல் லாபம்! சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்!ஏன் தெரியுமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி ஏற்றம்! ஒரே நாளில் 17 லட்சம் கோடி லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

இன்று பங்குச் சந்தைக்கு விடுமுறை! புனித வெள்ளி NSE, BSE ,MCX இயங்குமா? முழு விபரம்!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications