சரிவில் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி.. ஜாக்பாட் தான்..!

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, இந்திய சந்தைகள் சரிவில் தொடங்கியிருந்தாலும், முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.

இன்று காலை அமர்வில் சற்று சரிவினைக் கண்டிருந்த நிலையில், இது இன்னும் எவ்வளவு தான் சரிவினைக் காணுமோ என்ற கேள்வி எழுந்தது.

இதற்கிடையில் பல நிறுவனங்களின் சாதகமான கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இது சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

சரிவில் இருந்து ஏற்றம்

சரிவில் இருந்து ஏற்றம்

கடந்த சில வர்த்தக தினங்களாக சந்தையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் சற்று ஏற்றத்தினை கண்டிருப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக நிபுணர்களும், தற்போதைக்கு சந்தையானது சரிவினைக் கண்டாலும் நீண்டகால நோக்கில் சந்தையானது அதிகரிக்கலாம் என்று கூறியுள்ளனர். இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

 

சந்தை முடிவு நிலவரம்

சந்தை முடிவு நிலவரம்

இன்று காலை தொடக்கத்தில் சென்செக்ஸ் 72.08 புள்ளிகள் குறைந்து, 59,227.24 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 23 புள்ளிகள் குறைந்து, 17,668.30 புள்ளிகளாகவும் தொடங்கியது. அதன் பின்னர் சற்று சரிவிலேயே காணப்பட்ட நிலையில் முடிவில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 4445.56 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 59,744.88 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 131 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,822.30 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 2025 பங்குகள் ஏற்றத்திலும், 1184 பங்குகள் சரிவிலும், 154 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் இருந்து ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் குட்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளன. மற்றவை சற்று சரிவில் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, இந்தஸிந்த் வங்கி, கோல் இந்தியா, ஐஓசி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும், சிப்லா, ஹிண்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், டாடா கன்சியூமர் புராடக்ட்ஸ், சன் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்


இதே சென்செக்ஸ் குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச்.சி.எல் டெக், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே சன் பார்மா, பவர் கிரிட் கார்ப், ஐடிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+