தடுமாறும் சந்தை..! செய்வதறியாமல் நிற்கும் முதலீட்டாளர்கள்..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த ஆகஸ்ட் 23, 2019 மற்றும் ஆகஸ்ட் 30, 2019 அன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பல பொருளாதார முன்னேற்ற விவரங்களை அறிவித்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இந்திய வங்கிகளில் இருக்கும் சிக்கல்களை நீக்கவும் சொன்ன விஷயங்கள், எதிர்பார்த்த பலனை பங்குச் சந்தையில் கொடுக்கவில்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே சந்தை வர்த்தகம் இந்த அறிவிப்புகளால் உயர்ந்ததே ஒழிய உடனடியாக சந்தை சரிவைக் காணத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் 23, 2019 அன்று சென்செக்ஸ் 36,701 புள்ளிகளில் நிறைவு அடைந்து இருந்தது. அன்று மாலை சுமார் 5 மணிக்கு தான் மத்திய நிதி அமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் இன்று சென்செக்ஸ் 36,644 புள்ளிகளிலேயே தான் நிறைவு அடைந்து இருக்கிறது.

தடுமாறும் சந்தை..! செய்வதறியாமல் நிற்கும் முதலீட்டாளர்கள்..!

 

அதன் பின் கடந்த ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை அன்று வங்கிகள் இணைப்பு குறித்து பேசினார் நிர்மலா சீதாராமன். விநாயகர் சதுர்த்தி என்பதால் திங்கட்கிழமை, சந்தை விடுமுறையாக இருந்தது. அடுத்த ஒரே நாளில் சென்செக்ஸ் சுமார் 750 புள்ளிகள் சரிந்து பெரிய அடி வாங்கியது. குறிப்பாக பொதுத் துறை வங்கிகள் இண்டெக்ஸ் பலமான அடி வாங்கியது. இது சந்தை முதலீட்டாளர்கள் வங்கி இணைப்பை மோசமான ஒன்றாகப் கருதுவதையே காட்டுகிறது.

இப்போது வரை சந்தையை வழி நடத்தும் அளவுக்கு நல்ல செய்திகள் எதுவும் இல்லாததால் சந்தை கால் போன போக்கில் ஏற்றம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. ஆக சென்செக்ஸ் நாளையும் இறக்கம் காணத் தொடங்கினால் டே சார்ட் படி 36,400 முதல் நிலை சப்போர்ட்டாகவும், 36,000 புள்ளிகள் இரண்டாவது பெரிய சப்போர்ட்டாகவும் இருக்கும். ஒருவேளை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால் 37,000 மற்றும் 37,410 ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.

இன்று காலை சென்செக்ஸ் 36,821 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,644 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 80 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,860 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,847 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 3 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 34 பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,585 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,451 பங்குகள் ஏற்றத்திலும், 989 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,585 பங்குகளில் 29 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 152 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஆட்டோ, எனர்ஜி, மெட்டல் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கூடுதல் ஏற்றத்தில் வர்த்தகமாயின.

 

யெஸ் பேங்க், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. டாடா மோட்டார்ஸ், கோல் இந்தியா, ஓ என் ஜி சி, பாரத் பெட்ரோலியம், யெஸ் பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஹெச் டி எஃப் சி, இந்தியாபுல்ஸ் ஹவுசிங், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், ஹெச் டி எல் டெக் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.82-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.83 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex takes stand on 36400 points nifty up 3.25 points

closing bell: sensex takes stand on 36400 points nifty up 3.25 points
Story first published: Thursday, September 5, 2019, 17:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?