62,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்.. நிஃப்டி 18,450 மேலாக வர்த்தகம்.. என்ன காரணம்..!

நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலையிலேயே புதிய உச்சத்தில் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து முடிவிலும் ஏழாவது சந்தை அமர்வாக ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளது. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 459.64 புள்ளிகள் அதிகரித்து, 61,765.59 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்குச்சந்தை நிப்டி 138.50 புள்ளிகள் அதிகரித்து 18,477 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1677 பங்குகள் ஏற்றத்திலும், 1,563 பங்குகள் சரிவிலும், 127 பங்குகள் மாற்றம் இல்லாமலும் முடிவடைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ள அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 75.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது இந்திய சந்தையில் பையிங் பிரஷர் அதிகமாக இருந்ததால், ரூபாயின் மதிப்பு சற்றே அதிகரித்து முடிவடைந்துள்ளது.

இன்டெக்ஸ்கள்

இன்டெக்ஸ்கள்

இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பி.எஸ்.இ ஹெல்த்கேர் குறியீடு மட்டும் சரிவில் முடிவடைந்துள்ளது. அதே நேரம், நிஃப்டி பிஎஸ்இ, பிஎஸ்இ டெக், நிஃப்டி ஐடி உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்திலும், மற்ற குறியீடுகள் 1% கீழாக ஏற்றத்திலும் காணப்படுகின்றன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

இதனையடுத்து நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், எம் & எம், ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், பிரிட்டானியா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இன்ஃபோசிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.சி.எல் டெக், எம் & எம், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ஏற்றம் தொடரலாம்

ஏற்றம் தொடரலாம்

பங்கு சந்தையில் தொடர்ந்த இந்த ஏற்றமானது இன்றும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்தையில் தொடர்ந்து சர்வதேச முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், பங்கு சந்தையில் தொடர்ந்து சந்தை ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இது மேற்கொண்டு சந்தைக்கு சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு தடுப்பூசி விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது வெளியாகி வரும் பொருளாதார வளர்ச்சி குறித்தான சாதகமான குறியீடுகளும் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம். இதற்கிடையில் தான் தற்போது சென்செக்ஸ் 62,000 புள்ளிகளை நெருங்கும் நிலையில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+