இந்திய பங்கு சந்தைகள் இந்த வருடத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தான் தொடங்கியது. தற்போதும் கூட சென்செக்ஸ் (2.55 நிலவரப்படி) 900 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகிறது.
இது இந்திய சந்தையில் தொடர்ந்து அன்னிய முதலீடுகளின் வரத்தானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சந்தையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
இன்று ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள BSE ஹெல்த்கேர் தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றன, குறிப்பாக பேங்க் நிஃப்டி, பிஎஸ்இ மெட்டல்ஸ் 2% மேலாக காணப்படுகின்றது. இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ ஸ்மால் கேப், பிஎஸ்இ மிட் கேப், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றன. மற்றவை 1% கீழாக ஏற்றத்தில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட குறியீடுகள் டாப் கெயினராகவும், இதே சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்டீஸ், எம் & எம், டிவிஸ் லேப்ஸ், டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே போல டாக்டர் ரெட்டீஸ் லேப்ரட்டீஸ், எம் & எம், டெக் மகேந்திரா, நெஸ்டில், டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
முடிவு
புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஓமிக்ரான் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எண்ற நிலையே இருந்து வருகின்றது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமோ என்ற அச்சமும் சந்தையில் இருந்து வருகின்றது. எனினும் வருடத்தின் முதல் நாளான இன்று 900 புள்ளிகளுக்கு மேலாக காணப்பட்டது. முடிவில் சென்செக்ஸ் 929.4 புள்ளிகள் அதிகரித்து, 59,183.22 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 271.65 புள்ளிகள் அதிகரித்து, 17,625.65 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications