37,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்த சென்செக்ஸ்! 10,950-ல் நிலை கொண்ட நிஃப்டி!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நேற்றைய குளோசிங் பெல் கட்டுரையிலேயே, சென்செக்ஸை தூக்கி நிறுத்த ஃபண்டமெண்டலாக எந்த ஒரு வலுவான காரணிகளோ, நல்ல செய்திகளோ இல்லை. டெக்னிக்கலாகப் பார்த்தால் சென்செக்ஸ் டே சார்ட்டில் இன்றைய தேதிக்கு ஒரு டோஜி கேண்டில் தோன்றி இருக்கிறது. எனவே கடந்த செப்டம்பர் 04, 2019-ல் இருந்து கண்டு வரும் ஏற்ற டிரெண்ட் நேற்றுடன் முடிவடைய நிறைய வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே ஒரு இறக்கம் கண்டு சந்தை நிறைவு அடைந்து இருக்கிறது.

அதே போல ஒருவேளை நம் டெக்னிக்கல் கணிப்புகள் படி இறக்கம் காணத் தொடங்கினால் 37,000 முதல் சப்போர்ட்டாகவும், 36,400 அடுத்த வலுவான சப்போர்ட்டாகவும் இருக்கும் எனச் சொல்லி இருந்தோம். சொன்னது போல சென்செக்ஸ் 37,000 புள்ளிகளை சப்போர்ட் எடுத்து 37,000 புள்ளிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவு அடைந்து இருக்கிறது.

37,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்த சென்செக்ஸ்! 10,950-ல் நிலை கொண்ட நிஃப்டி!

காலை சென்செக்ஸ் 37,330 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 37,104 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 166 புள்ளிகள் அதிக இறக்கம் கண்டு இருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,058 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,981 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 54 புள்ளிகள் இறக்கம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 08 பங்குகள் ஏற்றத்திலும், 22 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 14 பங்குகள் ஏற்றத்திலும், 36 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,631 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,360 பங்குகள் ஏற்றத்திலும், 1,112 பங்குகள் இறக்கத்திலும், 163 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,635 பங்குகளில் 26 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 89 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் இறக்கத்தில் வர்த்தகமாயின. குறிப்பாக ஆட்டோ, எனர்ஜி, ரியாலிட்டி, நுகர்வு போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், மாருதி சுசூகி, ஹெச் டி எஃப் சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிண்டால்கோ, ஐசிஐசிஐ பேங்க், சன் பார்மா, இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.32-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 60.18 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

closing bell: sensex upward trend ends and nifty fall below 11000 mark

closing bell: sensex upward trend ends and nifty fall below 11000 mark
Story first published: Thursday, September 12, 2019, 15:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X