கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உயிர்பலியும் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இது ஒரு புறம் எனில், மறுபுறம் இதனால் பொருளாதாரமும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
இதனால் சர்வதேச பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. சொல்லப்போனால் உலக பொருளாதாரமே நெருக்கடியில் தள்ளப்படலாம் என சில அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அதிலும் உலகம் முழுக்க 2,19,246 பேர் இந்தக் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், 8,968 பேர் பலியாகியுள்ளனர். மொத்த அளவில் இப்படி எனில், இந்தியாவில் இதுவரை 165 பேர் கொரோனாவால் தாக்கம் அடைந்துள்ளனர். 3 பேர் இந்த கொடிய வைரஸின் தாக்கத்திற்கு பலியாகியுள்ளனர்.
தொடரும் சரிவு
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து தொழில் துறையும், உற்பத்தி துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தொழில் துறைகளில் செய்யப்படும் முதலீடுகள், மொத்த நுகர்வு, தேவை என அடுத்து தொடர்ந்து பிரச்சனைகளை கண்டு வருகின்றன. இதனால் சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது.
சந்தைகள் வீழ்ச்சி
இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் படு வீழ்ச்சி கண்டு வருகிறது. இதெல்லாம் ஒரு புறம் எனில் இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத் அளவு 74.84 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 2,150 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 26,714 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 636 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 7,832 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.
எச்சரிக்கை நடவடிக்கை
நாட்டில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனாவால் அரசு பல்வேறு விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக பெரிய பெரிய மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலா தலங்கள் என பல வற்றை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இது ஒரு புறம் எனில் மறுபுறம் ஒன்று கூடும் இடங்களை தவிர்க்குமாறும், இதனால் மக்கள் அத்தியாவசிய பயணங்கள் தவிர மற்றதை தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முதலீடுகள் வெளியேற்றம்
அதே போல சந்தை தொடர்ந்த் வீழ்ச்சி கண்டு வருவதை தொடர்ந்து, தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன. அதிலும் கொரொனாவில் தாக்கம் அதிகரித்த நாளில் இருந்தே அதிகளாவிலான அன்னிய நேரடி முதலீடுகள் வெளியேறி வருகின்றன. மேலும் புதிய முதலீடுகளையும் இது தவிர்க்க வழிவகுத்துள்ளது. இதனால் சந்தை மேலும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications