ஒரு பங்குக்கு 25 ரூபாய் Dividend: நவரத்தின அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனத்தின் ஜாக்பாட் அறிவிப்பு..!!

நவரத்தின அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு முடிவுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், சென்னை பெட்ரோலியம் நிறுவனம் தனது ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 719.19 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த முறை 212 சதவீதம் உயர்ந்து 2,247.03 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரு பங்குக்கு 25 ரூபாய் Dividend: நவரத்தின அந்தஸ்து பெற்ற அரசு நிறுவனத்தின் ஜாக்பாட் அறிவிப்பு..!!

மேலும் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் உயர்ந்து 22,055 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 20,033 கோடி ரூபாயாக இருந்தது. எனினும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் 29,358 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. எனவே காலாண்டு அடிப்படையில் வருவாய் குறைந்துள்ளது.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்குக்கும் 25 ரூபாய் இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பங்கின் முகமதிப்பில் 250 சதவீதமாகும். உங்கள் கைவசம் 1000 பங்குகள் இருந்தால் உங்களுக்கு டிவிடெண்டே 25000 ரூபாய் கிடைக்கும்.

Also Read

இந்த ஈவுத்தொகையை பெறுவதற்கு தகுதியான பங்குதாரர்களை தீர்மானிக்க அக்டோபர் 30ஆம் தேதி ரெக்கார்ட் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த தேதியில் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த ஈவுத்தொகையை பெற தகுதி பெறுவார்கள்.

சிறப்பான நிதி முடிவுகளால், வர்த்தக நேரத்தின் முடிவில் சென்னை பெட்ரோலியம் பங்குகள் லாபத்துடன் நிறைவடைந்தன. இன்று ஒரு பங்கின் விலை 1,450 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நவரத்தின பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு கடந்த 6 மாதங்களில் 35.39 சதவீத லாபத்தையும், கடந்த 1 ஆண்டில் 86 சதவீதமும், கடந்த 3 ஆண்டுகளில் தோராயமாக 166 சதவீத லாபத்தையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

Recommended For You

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. மணலியில் ஆலையை நிறுவி எண்ணெய் சுத்திகரிப்பு பணிகளில் ஈடுபடுகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+