மும்பை: இந்திய பங்கு சந்தைகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த நிதியாண்டின் கடைசி வர்த்தக நாளாக வெள்ளிக்கிழமையன்று நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளின் எதிரொலி, அன்னிய முதலீடுகள் வரத்து, ஆயில் & கேஸ், தகவல் தொழில் நுட்பம், ரியால்டி துறை என்பது டாப் கெயினர்களாக இருந்தது.
பி.எஸ்.இ சென்செக்ஸ் 1031.43 புள்ளிகள் அல்லது 1.78% ஏற்றம் கண்டு, 58,991.52 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 279.05 புள்ளிகள் அல்லது 1.63% ஏற்றம் கண்டு, 17,359.75 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
மானிட்டரி பாலிசி கூட்டம்
முதலீட்டாளர்கள் வரவிருக்கும் வாரத்தில் ரிசர்வ் வங்கியின் மானிட்டரி பாலிசி கூட்டமானது ஏப்ரல் 6 அன்று நடக்கவுள்ளது. இது கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. இது மேற்கொண்டு பத்திர சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதற்கிடையில் 25 அடிப்படை புள்ளிகள் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இந்த வட்டி அதிகரிப்பானது தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர வாகன விற்பனை குறித்தான தரவானது வெளியாகவுள்ளது.
மேக்ரோபொருளாதார தரவுகள்
மேக்ரோபொருளாதார தரவுகளான எஸ் & பி சர்வதேச உற்பத்தி குறித்தான Pmi மற்றும் சேவை குறித்தான பிஎம்ஐ குறியீடானது ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 அன்று வெளியாகவுள்ளது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தவிர வாகன விற்பனை உள்பட பலவும் வெளியாகவுள்ளது. ஆக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச தரவுகள்
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், அன்னிய முதலீடுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளன. குறிப்பாக தனி நபர் நுகர்வோர் செலவு குறித்தான தரவு மற்றும் பெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு என பலவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
நிஃப்டி
வரவிருக்கும் வாரத்தில் நிஃப்டி 17,600 என்ற லெவலினை வரும் வாரத்தில் எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே தொடர்ந்து 17,200 என்ற லெவலுக்கு மேலாக அதிகரிக்கும்போது, இது தொடர்ந்து அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications