வரும் நாட்களில் சந்தையை தீர்மானிக்க கூடிய 10 காரணிகள்.. அலர்ட்டா இருங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்கு சந்தையானது கடந்த வாரத்தில் சரிவினைக் கண்டதையடுத்து, வரும் வாரத்தில் தொடரலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. டிசம்பர் 23வுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் இந்திய சந்தையானது 2.5% வீழ்ச்சி கண்டது.

இதே ஜூன் மாதத்தில் இருந்து பார்க்கும்போது மிகப்பெரிய சரிவாகும்.

இது சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலை, ரெசசன் அச்சம், ஃபெடரல் வங்கியின் கடுமையான நடவடிக்கை, கொரோனா பரவல் என பல காரணிகளுக்கு மத்தியில் வரும் வாரத்திலும் இந்த போக்கு தொடரலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் வரும் வாரத்தில் இந்த சந்தையின் போக்கு எப்படியிருக்கும் கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சாமானியர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் தங்கம்.. இலக்கு எவ்வளவு தெரியுமா? சாமானியர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் தங்கம்.. இலக்கு எவ்வளவு தெரியுமா?

சென்செக்ஸ் சரியலாம் ஏன்?

சென்செக்ஸ் சரியலாம் ஏன்?

சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை உடைத்து காட்டியுள்ளது, இது உணர்வுபூர்வமாக கீழே இன்னும் சரிவடையலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்தில் ஹெல்த்கேர் என பல துறைகள் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கவலை

கொரோனா கவலை

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில், இது வரும் நாட்களில் இன்னும் மோசமாகலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் ஒரு சில வழக்குகள் கண்டறிப்பட்டுள்ளது, இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது இந்திய சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

மேக்ரோ எக்னாமிக் டேட்டா

மேக்ரோ எக்னாமிக் டேட்டா

டிசம்பர் 30 அன்று நிதிப்பற்றாக்குறை குறித்தான தரவானது வெளியாகவுள்ளது. இது தவிர வங்கிக் கடன் மற்றும் டெபாசிட் குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. இது தவிர வெளிப்புற கடன், நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட சில தரவுகளும் வெளியாகவுள்ளது.

சர்வதேச மேக்ரோ எக்னாமிக் டேட்டா

சர்வதேச மேக்ரோ எக்னாமிக் டேட்டா

அமெரிக்காவின் விற்பனையாகாத வீடு விற்பனை, வேலையில்லாதோர் நலன், எண்ணெய் இருப்பு, ஜப்பானின் வேலையின்மை விகிதம், சில்லறை விற்பனை விகிதம், வீடு விற்பனை, தொழில்துறை உற்பத்தி, சீனாவின் தொழில்துறை லாபம், நடப்பு கணக்கு பற்றாக்குறை என பலவும் கவனிக்க வேண்டிய தரவுகளாக உள்ளன.

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

தொடர்ந்து இரண்டாவது வாரமாக கச்சா எண்ணெய் விலையானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது பேரலுக்கு 85 டாலர்கள் என்ற லெவலிலேயே இருந்து வருகின்றது. இது வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது. இது விலை தொடர்ந்து அதிகரித்தால், ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

இந்திய சந்தையினை பொறுத்தவரையில் சந்தையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று அன்னிய முதலீடுகள். இதுவும் வரும் வாரத்தில் கவனிக்கப்பட வேண்டிய காரணிகளில் ஒன்று. இதுவரையில் டிசம்பர் மாதத்தில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வந்துள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

இரண்டு நிறுவனங்கள் வரும் நாட்களில் தங்களது பங்கினை வெளியிடவுள்ளன. ஒன்று ரேடியன் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீசஸின் ஐபிஓ டிசம்பர் 26 தொடங்கவுள்ளது. டிசம்பர் 27 அன்று முடிவடைகிறது. இதில் ஒரு பங்கிற்கு 94 - 99 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் 388 கோடி ரூபாய் திரட்டவுள்ளது.

சா பாலிமர்ஸ் டிசம்பர் 30 அன்று தனது பங்கினை வெளியிடவுள்ளது. ஜனவரி 4 கடைசி நாளாகும். இதன் விலை வரும் நாட்களில் வெளியாகலாம்.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கலாக நிஃப்டி 50 சற்றே சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் 17800 - 18000 என்ற லெவலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஏற்றம் கண்டால் 18000 - 18100 என்ற லெவலை எட்டலாம் எனவும், இதே சரிவினைக் கண்டால் 17,500 - 17800 என்ற லெவலை எட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எஃப் &ஓ எக்ஸ்பெய்ரி

எஃப் &ஓ எக்ஸ்பெய்ரி

வரும் வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி உள்ளது. இதன் காரணமாக சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

இது தவிர இந்தியா VIX-ம் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. இதுவும் சந்தையில் அழுத்தம் இருக்கலாம் என்பது போலவே காணப்படுகிறது. இதற்கிடையில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் டிசம்பர் 29, டிசம்பர் 30 தேதிகளில் தங்களது டிவிடெண்டு, பைபேக் ஷேர்ஸ் என பலவும் கவனிக்க வேண்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dalal street week ahead: 10 things that will keep traders on busy next week

After the Indian stock market saw a correction last week, there are fears that it may continue in the coming week. What are the things to look out for?
Story first published: Sunday, December 25, 2022, 23:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X