இந்திய சந்தையில் செல்லிங் அழுத்தம் இருந்து வரும் நிலையில், வரும் வாரத்தில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.
தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளில் ரெசசன் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இது சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்ற இறக்கத்தில் அதிகரிக்கலாம்
உச்சத்தில் சந்தை இருந்து வரும் நிலையில், சந்தையானது ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றது. இது ஒரு ரேஞ்ச் பவுண்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சர்வதேச சந்தையில் தாக்கம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இது எஃப் என் சி ஜி, டெகனாலஜி துறை மற்றும் எம் என் சி துறை, பேங்க் நிஃப்டி குறியீடுகள் சரிவினைக் கண்டுள்ளன.
புதிய ஆர்டர்கள்
குறிப்பாக சென்செக்ஸ் 461 புள்ளிகள் குறைந்து, 61,338 புள்ளிகளாகவும், நிஃப்டி 146 புள்ளிகள் குறைந்து, 18,269 புள்ளிகளாகவும் குறைந்துள்ளது. இதில் நிஃப்டி மிட்கேப், மிட்கேப் 100 இன்டெக்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகிறது. வரும் வாரத்தில் புதிய ஆர்டர்கள் தேர்ந்தெடுப்பது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வளர்ச்சி
அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் குறித்தான மூன்றாவது காலாண்டு விகிதம் வெளியாகவுள்ளது. இது டிசம்பர் 22 அன்று வெளியாகவுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.9% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் சரிவினைக் கண்டுள்ளது. நுகர்வோர் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 0.6% ஆக சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் காலாண்டில் 1.6% சரிவினைக் கண்டு இருந்தது. ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த பாலிசி கூட்டம் ஜனவரி இறுதியில் நடைபெறவுள்ளது.
குளோபல் டேட்டா
அமெரிக்காவின் வீடு விற்பனை, ஐரோப்பாவின் சம்பளம் குறித்தான தரவு, நடப்பு கணக்கு, ஜப்பானின் பணவீக்கம் குறித்தான தரவு, இங்கிலாந்தின் ஜிடிபி, கார் உற்பத்தி என பல தரவுகள் வெளியாகவுள்ளன.
மானிட்டரி பாலிசி கூட்டம்
மானிட்டரி பாலிசி கூட்டம் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த டிசம்பர் 7ம் தேதி அன்று 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 6.25% அதிகரித்தது. இது பணவீக்கத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வரவிருக்கும் கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் இருக்கலாம்.
அன்னிய முதலீடுகள்
வரவிருக்கும் வாரத்தில் அன்னிய முதலீடுகள் என்பது சந்தையின் போக்கினை தீர்மானிக்கலாம். இது சர்வதேச சந்தையில் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறினால் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கடந்த வாரத்தில் 1800 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளது., இதுவும் வரும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
எண்ணெய் விலை
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 90 டாலர்களுக்கு கீழாக காணப்படுகிறது. இதுவும் சந்தையில் தாக்கத்தினை எர்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரூபாயின் மாற்றம் என பல காரணிகளும் வரும் நாட்களில் சந்தையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications