இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. இத்துறையை சேர்ந்த பங்குகளின் விலை 14 சதவீதம் வரை உயர்ந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி திறன்களை முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தியது போன்ற காரணங்களால் பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகளின் விலை மளமளவென உயர்ந்தது.
கொச்சின் ஷிப்யார்டு
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே கொச்சின் ஷிப்யார்டு நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் சுமார் 14 சதவீதம் உயர்ந்து ரூ.1,797.10 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே பாரத் டைனமிக்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.41 சதவீதம் உயர்ந்து ரூ.1,821.95 வரை சென்றது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே பாராஸ் டிபென்ட்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 9.17 சதவீதம் உயர்ந்து ரூ.1,548.80 வரை அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.55 சதவீதம் உயர்ந்து ரூ.3,229 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பங்கின் விலைமுந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.02 சதவீதம் அதிகரித்து ரூ.345.90 வரை உயர்ந்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.09 சதவீதம் உயர்ந்து ரூ.4,798 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்ததகத்தின் இடையே ஜென் டெக்னாலஜிஸ் லிமிடெட் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் உயர்ந்து ரூ.1,627.95 வரை அதிகரித்தது.
கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
லஷ்கர்-இ-தொய்பா
இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள் மற்றும் ஜெய்ஷ் இ முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. மேலும் 100 தீவிரவாதிகள் பலியாகினர். இதனையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது டிரோன்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் அவற்றை எல்லாம் இந்திய ராணுவம் முறியடித்தது. இறுதியில், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது. இதனையடுத்து இந்தியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நவீன போரில் நமது ஆதிக்கத்தை நாங்கள் நிரூபித்துள்ளோம். நாங்கள் எப்போதும் பாகிஸ்தானை போர்க்களத்தில் தோற்கடித்துள்ளோம். இன்று நாங்கள் மீண்டும் எங்கள் மேன்மையை நிரூபித்துள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான நேரம் வந்து விட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
500 கோடி போட்டு 10,000 கோடி எடுத்த முகேஷ் அம்பானி.. ஏசியன் பெயிண்ட்ஸ் மூலம் ஜாக்பாட்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications