மும்பை: அண்மையில் பிரபல முதலீட்டாளரான விஜய் கேடியா, பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தில் தான் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்தார். இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பேசுபொருளானது. இந்நிலையில் பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என தரகு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மல்டி பேக்கர் நிறுவனமான பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் 290% லாபத்தை பெற்று தந்துள்ளது.

2024 மார்ச் கணக்கின்படி இந்த நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளரான விஜய் கேடியா, சுமார் பத்து லட்சம் பங்குகளை அதாவது நிறுவனத்தில் இருந்த தன்னுடைய பங்குகளில் 0.13 சதவீதத்தை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது டிசம்பர் நிறுவனத்தில் 1.68 சதவீத பங்குகளை வைத்திருந்த அவர் தற்போது 1.55 சதவீதமாக குறைத்துள்ளார்.
பட்டேல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனம் அணைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலைகள் மற்றும் தொழிற்சாலைகளை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 4,500 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையின் சிஏஜிஆர் என்பது 79% ஆக இருக்கிறது. இந்த நிறுவனம் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இந்நிறுவனம் 2023ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 4,322 கோடியாகவும், லாபம் 179 கோடி ரூபாயாகவும் உள்ளது. நிறுவன பங்குகளில் 52.72% சில்லறை முதலீட்டாளர்களிடம் உள்ளது. 39.41% புரமோட்டர்களிடமும், உள்நாட்டு நிறுவனங்கள் வசம் 4.41% மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் 3.37% உள்ளது.
நிறுவனத்தின் வருவாய் மற்றும் பங்கு மதிப்பு உயர்வு ஆகியவை சிறப்பாக இருக்கும் நிலையில் விஜய் கேடியா இந்த பங்குகளை விற்றது பேசு பொருளானது. இருப்பினும் பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஆனந்த் ரதி, பட்டேல் இன்ஜினியரிங் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது. ரூ.58க்கு இந்நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகமாகின்றன. இது விரைவில் ரூ.66ஐ எட்டும் என கணிப்பு வெளியாகியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications