இன்று வாங்கினால் மட்டுமே டிவிடெண்ட்.. நாளை ரெக்கார்டு தேதி அறிவித்த 30 பங்குகள்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று முக்கியமான வர்த்தக நாளாக அமைந்துள்ளது. டிவிடெண்ட் மூலம் வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஜூலை 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரெக்கார்டு தேதியாக நிர்ணயித்துள்ள 30 நிறுவனங்களின் பங்குகளை வாங்க இன்று (ஜூலை 9) கடைசி வாய்ப்பாக உள்ளது.

தற்போதைய T+1 செட்டில்மென்ட் நடைமுறையின்படி, ரெக்கார்டு தேதிக்கு முந்தைய வர்த்தக நாளிலேயே பங்குகளை வாங்கினால் மட்டுமே அவை டீமேட் கணக்கில் சரியான நேரத்தில் வரவு வைக்கப்பட்டு, டிவிடெண்ட் பெறும் தகுதி கிடைக்கும்.

இன்று வாங்கினால் மட்டுமே டிவிடெண்ட்.. நாளை ரெக்கார்டு தேதி அறிவித்த 30 பங்குகள்!

ஏன் இன்று கடைசி நாள்?

பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியை 'ரெக்கார்டு தேதி'யாக அறிவிக்கின்றன. அந்த தேதியில் நிறுவனத்தின் பதிவேட்டில் பங்குதாரராக இருப்பவர்களுக்கே டிவிடெண்ட் வழங்கப்படும்.

இந்திய பங்குச்சந்தையில் தற்போது நடைமுறையில் இருக்கும் T+1 செட்டில்மென்ட் விதிமுறையின்படி, பங்குகளை வாங்கிய அடுத்த வர்த்தக நாளில்தான் அவை முதலீட்டாளரின் டீமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். அதனால், ஜூலை 10-ம் தேதி ரெக்கார்டு தேதியாக உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு இன்று மட்டுமே வாய்ப்பு உள்ளது.

ஆக்சிஸ் வங்கி, BSE, நெஸ்லே உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்

இந்த பட்டியலில் தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி ஒரு பங்குக்கு ரூ.1 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. கடந்த 2019 முதல் தொடர்ந்து ஒரு பங்குக்கு ரூ.1 டிவிடெண்ட் வழங்கி வரும் ஆக்சிஸ் வங்கி, இந்த ஆண்டும் அதே அளவிலான டிவிடெண்டை பரிந்துரைத்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை நிறுவனமான BSE, ஒரு பங்குக்கு ரூ.10 டிவிடெண்ட் வழங்குகிறது. கடந்த ஆண்டு ரூ.23 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு ரூ.15 டிவிடெண்ட் வழங்கியிருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தொகை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.5 இறுதி டிவிடெண்ட் மற்றும் ரூ.2 சிறப்பு டிவிடெண்ட் என மொத்தம் ரூ.7 வழங்க உள்ளது.

மருந்து, சிமெண்ட், மெட்டல் துறையிலும் டிவிடெண்ட்

மருந்து துறையில் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.8 இறுதி டிவிடெண்ட் வழங்குகிறது. Artemis Medicare Services நிறுவனம் ரூ.0.45 டிவிடெண்ட் அறிவித்துள்ளது.

இதனுடன் JK Cement (ரூ.20), Grindwell Norton (ரூ.19), Hindalco உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களும் இந்த வாரம் டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டெக், லாஜிஸ்டிக்ஸ், நிதி நிறுவனங்களும் பட்டியலில்

தொழில்நுட்ப துறையில் Birlasoft மற்றும் CAMS ஆகிய நிறுவனங்கள் தலா ரூ.4 இறுதி டிவிடெண்ட் வழங்குகின்றன. D-Link (India) நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.20 இறுதி டிவிடெண்டுடன், கூடுதலாக ரூ.7.50 சிறப்பு டிவிடெண்டும் வழங்குகிறது.

மேலும் Aegis Logistics, Control Print, Geojit Financial Services, Mahindra Logistics, Nilkamal, Nucleus Software Exports, Orient Electric, Rossari Biotech, Sobha, The New India Assurance, VST Industries, ZF Commercial Vehicle Control Systems உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஜூலை 10-ம் தேதி ரெக்கார்டு தேதியாக அறிவித்துள்ளன.

போனஸ், ஸ்டாக் ஸ்பிளிட் வாய்ப்பும்

டிவிடெண்ட் மட்டுமல்லாமல், சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள் மற்றும் ஸ்டாக் ஸ்பிளிட்டையும் அறிவித்துள்ளன. Goldiam International நிறுவனம் 3 பங்குகளுக்கு 1 போனஸ் பங்கு (1:3 Bonus Issue) வழங்குகிறது. Hindusthan Insulators & Industries நிறுவனம் 2:1 போனஸ் பங்குகளை அறிவித்துள்ளது.

அதேபோல், Mangalam Worldwide நிறுவனம் 1:10 விகிதத்தில் ஸ்டாக் ஸ்பிளிட்டை மேற்கொள்கிறது. இந்த நிறுவனங்களுக்கும் ஜூலை 10-ம் தேதி ரெக்கார்டு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிவிடெண்ட், போனஸ் மற்றும் ஸ்டாக் ஸ்பிளிட் போன்ற கார்ப்பரேட் நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்பும் முதலீட்டாளர்கள், ரெக்கார்டு தேதி மற்றும் செட்டில்மென்ட் விதிமுறைகளை கவனத்தில் கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பது முக்கியமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+