Dividend updates: ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது அந்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம். இதனைத் தான் டிவிடெண்ட் என்பார்கள்.
பொதுவாக இந்த டிவிடெண்டை தரும் நிறுவன பங்குகளை வாங்குவது சிறப்பு. குறிப்பாக சில நிறுவனங்கள் தொடர்ந்து டிவிடெண்டினை அளித்து வரும் நிலையில், அது போன்ற பங்குகளை வாங்கலாம்.
5 பங்குகள்
அப்படி வரும் வாரம் 5 டிவிடெண்ட் கொடுக்க உள்ள பங்குகள் பட்டியலில் உள்ளன. குறிப்பாக கெயில் (இந்தியா) லிமிடெட், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட், அலுமினியம் கம்பெனி லிமிடெட், காமா ஹோல்டிங்ஸ் லிமிடெட், ஏஜிஐ இன்ஃப்ரா லிமிடெட் உள்ளிட்ட பங்குகள் பட்டியலில் உள்ளன.
கெயில் இந்தியா
பொதுத்துறை நிறுவனமான கெயில் இந்தியா ஒரு மகாரத்னா நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கூட்டம் மார்ச் 13,2023 அன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்ட் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இந்த பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.07% அளவுக்கு ஏற்றம் கண்டு, 111 ரூபாயாக காணப்பட்டது.
இதன் சந்தை மூலதனம் 72,983.61 கோடி ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 115.69 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 83 ரூபாயாகும். லார்ஜ் கேப் நிறுவனமான இந்த பங்கின் விலையானது கடந்த 1 மாதத்தில் 15% அளவுக்கு ஏற்றம் காணலாம். இதே 1 வருடத்தில் 12% ஏற்றத்திலும், 3 வருடத்தில் 65% அளவுக்கும் ஏற்றம் கண்டுள்ளது.
சன் டிவி நெட்வொர்க்
சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டமும் மார்ச் 13, 2023ல் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கின் விலையானது கடந்த அமர்வில் 436.80 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்ட நிலையில் இதன் சந்தை மதிப்பு 17,213.62 கோடி ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 568.20 ரூபாயாகவும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 402.55 ரூபாயாகவும் உள்ளது. இந்த மிட் கேப் நிறுவனமான இது, கடந்த 3 ஆண்டுகளில் 8% ஏற்றம் கண்டும், கடந்த 1 ஆண்டில் 4% ஏற்றத்தில் காணப்பட்டது.
நேஷனல் அலுமினியம் கம்பெனி
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனமும் நவரத்னா ஸ்டாக்குகளில் ஒன்று. இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டமும் மார்ச் 13, 2023 அன்று நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நால்கோ நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 3 மாதத்தில் 6% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
இதே கடந்த அமர்வில் ஒரு பங்குக்கு 82 ரூபாய் எனும் அளவில் காணப்படுகின்றது. இதன் சந்தை மதிப்பானது, 15,060.38 கோடி ரூபாய் எனும் அளவுக்கு உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 132.45 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 67 ரூபாயாகும்.
காமா ஹோல்டிங்ஸ்
காமா ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த ஓராண்டில் 36% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கிற்கு இயக்குனர் குழு கூட்டமானது மார்ச் 13, 2023 அன்று நடக்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் இடைக்கால டிவிடெண்ட் பற்றி அறிவிப்பு வெளியாகலாம். இப்பங்கின் விலை கடந்த அமர்வில் 12,203.15 ரூபாயாக உள்ளது.
இந்த மிட் கேப் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 7,832.12 கோடி ரூபாயாகும். இதன் சந்தை மூலதனம் 7,832.12 கோடி ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 14,600 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 8710 ரூபாயாகும்.
ஏஜிஐ இன்ஃப்ரா
ஏஜிஐ இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தின் ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 1 வருடத்தில் 36% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே இயக்குனர் குழு கூட்டமானது மார்ச் 13, 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த பங்கு விலையானது கடந்த 1 வாரத்தில் 105% எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
இதே கடந்த அமர்வின் விலை 477.25 ரூபாயாகும். இதன் சந்தை மூலதனமானது 583.04 கோடி ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 601 ரூபாயாகும். இதன் 52 குறைந்தபட்ச விலை 222.20 ரூபாயாகும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications