நாட்டில் ஒவ்வொரு தீபாவளியின் போதும், இந்தியப் பங்குச் சந்தையானது சிறப்பு வர்த்தகம் எனப்படும் ஒரு மணி நேர வர்த்தகத்தை தொடங்குகின்றன. இவை பெரும்பாலும் மாலை நேரத்தில் தொடங்கும். இது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான ஒரு நல்ல நேரமாக கருதுகின்றனர். இதனை முதலீட்டாளர்கள் பெரும்பாலும் செல்வத்தையும் வெற்றியையும் சேர்ப்பதற்கான வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
இந்த ஆண்டிற்கான சிறப்பு வர்த்தக அமர்வினை மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் நவம்பர் 1, வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடத்துகின்றன. இந்த தேதியில் பங்குச் சந்தை பகலில் சந்தைகள் மூடப்பட்டிருக்கும் அதே வேளையில், தீபாவளியின் போது வர்த்தகம் செய்யும் நீண்டகால வழக்கத்தை பின்பற்றி, இந்த சிறப்பு வர்த்தகம் ஆனது முதலீட்டாளர்கள் டோக்கன் முதலீடுகளை செய்ய அனுமதிக்கிறது.

இதுவரை நடந்த தீபாவளி சிறப்பு வர்த்தகத்தில் வரலாற்று அடிப்படையில், பெரும்பாலும் வருமானத்தை கொடுத்துள்ளன. அதன்படி தீபாவளி சிறப்பு வர்த்தகங்களில் நிஃப்டி கடந்த 16 ஆண்டுகளில், இந்த 13 ஆண்டுகள் சிறப்பான ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன.
2023 தீபாவளி சிறப்பு வர்த்தகம்: 2023 இல், தீபாவளி நவம்பர் 12 அன்று கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் நிஃப்டி அரை சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தன. ஐந்து ஆண்டுகளில் இது இரண்டாவது சிறந்த சிறப்பு வர்த்தக லாபத்தைப் பதிவு செய்தன. அப்போது, குறியீடுகளை பொறுத்தவரையில் சிறப்பான வருமானத்தை வழங்கின. அவற்றில் குறிப்பாக பிஎஸ்இ சென்செக்ஸ் 355 புள்ளிகள் உயர்ந்து 0.55 சதவீதம் அதிகரித்து 65,259 ஆகவும், நிஃப்டி50 100 புள்ளிகள் அதிகரித்து 0.52 சதவீதம் உயர்ந்து 19,525 ஆகவும் முடிந்தது.
மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சிறப்பாக செயல்பட்டன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.67 சதவீதம் உயர்ந்தது மற்றும் பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 1.14 சதவீதம் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனத்தில் முதலீட்டாளர்கள் லாபத்தைக் கண்டனர். இது ரூ.322.5 லட்சமாக உயர்ந்து, மதிப்பில் ரூ.2.2 லட்சம் கோடியை அதிகரித்தது.
2023 சிறப்பு வர்த்தகத்தில் சிறப்பான செயல்திறன் அடிப்படையில், 30 சென்செக்ஸ் பங்குகளில் 28 பங்குகள் மற்றும் நிஃப்டி 50 பங்குகளில் 43 பங்குகள் சிறப்பான செயல்திறனை வழங்கின. அவற்றில் குறிப்பாக கோல் இந்தியா , யுபிஎல் , இன்ஃபோசிஸ் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டிய நிலையில் அவை சிறந்த செயல்திறன் கொண்ட நிறுவனங்களாக இருந்தன.அதேபோல், நிஃப்டி ஐடி 0.72 சதவீதம் உயர்ந்து, நிஃப்டி மெட்டல் மற்றும் ரியாலிட்டி குறியீடுகள் தலா 0.6 சதவீதம் அதிகரித்து, நிஃப்டி வங்கி 0.40 சதவீதம் உயர்ந்து 43,996.65 ஆக உயர்ந்தது.
தீபாவளி சிறப்பு வர்த்தக வரலாறு: பல ஆண்டுகளாக, தீபாவளி சிறப்பு வர்த்தகம் ஆனது தொடர்ந்து ஏற்றமாகவே உள்ளது. அதன்படி, கடந்த 2022 வர்த்தகத்தில் சுமார் ஒரு சதவீதம் உயர்வு பதிவு செய்யப்பட்டது. அதேபோல், 2021 வர்த்தகம் 0.5 சதவீதமும், 2020 வர்த்தகம் 0.47 சதவீதமும் உயர்ந்தன. அதேபோல், 2019ல் 0.37 சதவீதமும் உயர்ந்தன. அதே சமயம் 2018ல் 0.7 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. மறுபுறம் 2017ல் -0.6 சதவீதம் சிறிய சரிவு காணப்பட்டது. 2016ல் -0.04 சதவீதம் சரிவு, மற்றும் 2012 -0.3 சதவீதம் சரிவை பதிவு செய்தன.
மிகவும் குறிப்பிடத்தக்க தீபாவளி சிறப்பு வர்த்தகம் அக்டோபர் 28, 2008 அன்று உலகளாவிய நிதி நெருக்கடியின் போது நிகழ்ந்தது. அப்போது குறியீடுகள் கிட்டத்தட்ட 6 சதவீதம் உயர்ந்தது. இது இன்றுவரை செய்யப்பட்ட வர்த்தகத்தின் அதிகபட்ச லாபத்தைக் குறிக்கிறது.
தீபாவளி சிறப்பு வர்த்தகம் ஆனது நன்மைகளை வழங்கும் நிலையில், ஆய்வாளர்கள் சிலர் பங்குகளை வாங்குவதற்கான பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். சிறப்பு வர்த்தக நாளில் அதிக பணப்புழக்கம் இருப்பதால், முதலீட்டாளர்கள், குறிப்பாக தொடக்க நிலை முதலீட்டாளர்கள், பெரிய வர்த்தகங்களை விட டோக்கன் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முக்கியமாக நிதி ஆலோசகருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications