உலகளவில் அமெரிக்கா தொடங்கி தென்கொரியா வரை பல்வேறு நாடுகளின் பங்குசந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்தன. உலகளாவிய சந்தைகளின் கடும் சரிவுக்கு மத்தியிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று பயங்கர ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு தீபாவளி பரிசு தந்துள்ளன.
சென்செக்ஸ் காலை முதலே ஏற்றத்துடனே இருந்தது. பிற்பகலில் சென்செக்ஸ் 1500 புள்ளிகள் அதாவது 1.73% உயர்ந்து 80,681 புள்ளிகளாக வர்த்தகமானது. நிஃப்டி 360 புள்ளிகள் உயர்வு கண்டு 24,890 புள்ளிகளாக உயர்ந்தது. பெரும்பாலான பங்குகள் இன்று ஏற்றத்துடனே இருந்தன. கடந்த 5 நாட்கலில் மட்டும் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் 7% உயர்ந்துள்ளன.

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்புக்கு எதிராக அமைந்ததால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் இரண்டு நாளாகவே பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 36,000 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
அடுத்ததாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு மிக பெரிய சாதகமாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் குறையும் என்பதால், இந்தியாவின் பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறித்த அச்சம் குறைந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
மேலும் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் மற்றும் வணிக செயல்பாடுகள் சந்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்ததும், முன்னணி நிறுவனங்களின் பங்குகள் மீதான வாங்கும் ஆர்வத்தை தூண்டியது.
அமெரிக்க மற்றும் இதர ஆசிய-ஐரோப்பிய சந்தைகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் சரிவுகள் ஒருபுறம் இருக்க, இந்தியாவின் வலுவான மேக்ரோ பொருளாதாரக் குறியீடுகள் உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளது. இதனால் தான் மற்ற சந்தைகள் சரிந்தாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
குறிப்பிட்ட சில பங்குகள் மட்டும் இல்லாமல், பேங்கிங், ஐடி, ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற பல்வேறு முக்கிய துறைசார் குறியீடுகள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெற்றதால், முதலீட்டாளர்கள் கணிசமான லாபம் பார்த்தனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

