இந்த ஆண்டு இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன அதன் பிறகு சிறிய சரிவை சந்தித்துள்ளது. தற்போது பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை குறைவாக உள்ளது. இந்நிலையில் பங்கு தரகு நிறுவனமான சோழ செக்யூரிட்டிஸ், தீபாவளி முதலீட்டுக்கு டெக்னிக்கல் மற்றும் பண்டமென்டல் அளவுகோல்களில் சில தரமான பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளது.
ஜே.பி.எம். ஆட்டோ, டி.எல்.எஃப்., பவர் கிரிட், ஆக்சிஸ் வங்கி, கோத்ரெஜ் பிராப்பர்டிஸ் ஆகிய பங்குகள் டெக்னிக்கல் அடிப்படையில் முதலீடு செய்ய தரமான பங்குகளும் என்றும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ், பூனவல்லா பின்கார்ப், ரயில் விகாஸ் நிகாம் ஆகிய பங்குகள் பண்டல்மென்டல் அளவுகோல்களில் முதலீட்டுக்கான சிறந்த பங்குகளாக பங்குதரகு நிறுவனம் கணித்துள்ளது.

ஜே.பி.எம். ஆட்டோ: இந்த பங்குகளை வாங்கலாம் என்று சோழா செக்யூரிட்டிஸ் பரிந்துரை செய்துள்ளது. தற்போது இந்த பங்கின் விலை ரூ.1,234ஆக உள்ளது, இதற்கான இலக்கு விலை 1,670 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸாக 1,000 ரூபாயாகவும் பங்கு தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.
டி.எல்.எஃப்.: இப்பங்கினை தற்போதைய சந்தை விலையான ரூ.554ல் வாங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இப்பங்கு 700 ரூபாய் வரை உயரும் என கணித்துள்ளனர். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.460ஆக மதிப்பிட்டுள்ளனர்
பவர் கிரிட்: இந்த பங்குகளை வாங்கலாம் என்று சோழா செக்யூரிட்ஸ் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.200ஆக உள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.165ஆகவும், பங்கின் இலக்கு விலை ரூ.270ஆகவும் மதிப்பிட்டுள்ளனர்.
ஆக்சிஸ் வங்கி: தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி பங்கினை ரூ.989 என்ற அளவில் வாங்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்தனர். இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.850ஆகவும், பங்கின் இலக்கு விலை ரூ.1,300ஆகவும் தரகு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
கோத்ரெஜ் பிராப்பர்டிஸ்: இப்பங்கினை ரூ.1,639 என்ற அளவில் வாங்கலாம் என்று நிபுணர்கள பரிந்துரை செய்தனர். இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.1,425ஆகவும், இலக்கு விலை ரூ.2,150ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: அடுத்த 3 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 15 சதவீதம் அதிகரிக்கும் என்று பங்கு தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. முதலீட்டுக்கு சிறந்த பங்குகளில் இது ஒன்று என்று தெரிவித்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ்: இந்நிறுவனம் ரூ.81 ஆயிரம் கோடிக்கு மேல் ஆர்டர்களை கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு 24 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த இரணடு ஆண்டுகளில் இதே போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூனவல்லா பின்கார்ப்: இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் வலுவான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2022-23 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு தொடர்ந்து வளரும் என்று சோழா செக்யூரிட்ஸ் கணித்துள்ளது.
ரயில் விகாஸ் நிகாம்: கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் லாபம் 20 சதவீதமும், வருவாய் 22 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் ரூ.65,000 கோடிக்கு மேல் ஆர்டர் வைத்துள்ளது என்று பங்கு தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications