பொதுவாக தீபாவளி வந்து விட்டாலே மக்களிடம் பணம் அதிகம் நடமாடும். அந்த சமயத்தில் பலர் புத்திசாலித்தனமாக பங்குகளில் முதலீடு செய்வர். மேலும் தீபாவளியில் பங்குகளில் முதலீடு செய்வது மங்களகரமானது என்ற நம்பிக்கையும் உள்ளது.
கோடக் செக்யூரிட்டிஸ் நிபுணர்கள் 2023 தீபாவளி சீசனில் முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்பு உள்ள பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, பி.சி.பி.எல். உள்ளிட்ட 6 பங்குகள் எதிர்காலத்தில் நல்ல ஆதாயம் அளிக்கும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.2,725ஆக கோடக் செக்யூரிட்டிஸ் நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.2,310.65ஆக உள்ளது. 5ஜி சேவையை பணமாக்குவதில் கவனம், சில்லரை விற்பனை துறையில் ரிலையன்ஸின் விரிவாக்கம், கே.ஜி. டி6-ல் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சிறப்பாக வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் நிகர கடன் குறைந்துள்ளது.
கனரா வங்கி: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி பங்கை வாங்கலாம் என்று கோடக் செக்யூரிட்டிஸ் மதிப்பிட்டுள்ளது. தற்போது இப்பங்கின் விலை ரூ.384.05ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.425ஆக நிர்ணயம் செய்துள்ளது. கனரா வங்கி வலுவான நிகர வட்டி வரம்பை பராமரிக்கும் அதேவேளையில், நிகர வட்டி வருவாயில் ஆரோக்கியமான 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் வங்கியின் வாராக் கடன் நிலவரமும் முன்னேற்றம் கண்டுள்ளது. வங்கி தொடர்நது நேர்மறையான வளர்ச்சிக்கு நல்ல நிலையில் உள்ளது.
சிப்லா: இந்நிறுவன பங்குக்கு 'add'என்று மதிப்பீடு வழங்கியுள்ளது அதாவது பங்குகளில் முதலீடு செய்யலாம். தற்போது இப்பங்கு ரூ.1,238.45ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,320ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒராண்டில் பங்கு விலை 6 சதவீதம் உயர்ந்துள்ளது. 3 ஆண்டுகளில் 15 சதவீதமும், 5 ஆண்டுகளில் 18 சதவீதமும் இப்பங்கு ஆதாயம் அளித்துள்ளது.
சையண்ட் லிமிடெட்: ஐ.டி. துறையை சேர்ந்த சையண்ட் லிமிடெட் பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். இப்பங்கின் இலக்கு ரூ.2,000ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பங்கு விலை ரூ.1,665.25ஆக உள்ளது. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 124 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் டிஜிட்டல் உள்ளிட்ட அதிக வளர்ச்சி சேவைகளுக்கு யுக்தி முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும், விண்வெளி, ஆட்டோமோட்டிவ் உள்ளிட்ட துறைகளில் நிலையான தேவை இருக்கும் எதிர்பார்க்கிறது.
கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்: தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பங்குக்கு add என்று ஆய்வாளர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,135ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இப்பங்கு விலை ரூ.987.55ஆக உள்ளது. கடந்த ஒராண்டில் இப்பங்கு 24 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோத்ரெஜ் கன்ஸ்யூமர் தனது உற்பத்தி திறனை 20 சதவீதம் அதிகரிக்க 18 முதல் 36 மாதங்களில் ரூ.900 கோடியை மூலதனமாக செலவினமாக மேற்கொள்ள உள்ளது.
பி.சி.பி.எல். லிமிடெட்: கார்பன் ப்ளாக் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பி.சி.பி.எல். பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பீடு செய்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.214ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.260ஆக நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த ஒராண்டில் இப்பங்கு 57 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னை ஆலை விரிவாக்கம் மற்றும் 2 புதிய காப்புரிமை கையகப்படுத்தியது போன்றவை இந்நிறுவனம் புதுமை மற்றும் விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications