5 ஆண்டுகளில் 1,900% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்த டிக்சன் டெக்னாலஜிஸ்..!

டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் இந்தியாவில் மின்னணு உற்பத்தி சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். பிஎஸ்இ 200 இன்டெக்ஸில் இந்நிறுவன பங்கு இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் இதுவும் ஒன்று. இதனால் முதலீட்டாளர்களால் அதிக விரும்பப்படும் பங்குகளில் ஒன்றாக இந்நிறுவன பங்கு விளங்குகிறது. இதனால் இந்நிறுவனம் வெளியிடும் எந்த தகவலையும் முதலீட்டாளர்கள் அதிக கவனிப்பார்கள். இதன் தாக்கம் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

5 ஆண்டுகளில் 1,900% லாபம்.. முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்த டிக்சன் டெக்னாலஜிஸ்..!

டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் இன்று பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், சிக்னிஃபை இன்னோவேஷன்ஸ் இந்தியா லிமிடெட் உடன் இணைந்து, லைட்டிங் தயாரிப்புகள் மற்றும் ஆபரணங்களின் ஓஇஎம் வணிகத்தை மேற்கொள்வதற்காக கூட்டு முயற்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இது உறுதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெறுதல் மற்றும் வழக்கமான நிபந்தனைகளை முன்னுதாரணமாக நிறைவு செய்தல் ஆகியவற்றுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இறுதியில் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.07 சதவீதம் உயர்ந்து ரூ.13,526.65ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.81,267 கோடியாக இருந்தது.

கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.19,149.80ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 29.5 சதவீதம் குறைவாக உள்ளது.

நீண்ட கால அடிப்படையில் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 1,900 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 380 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.

கடந்த ஓராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 82 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் டிக்சன் டெக்னாலஜிஸ் லிமிடெட் வருவாயாக ரூ.6,411 கோடியும். நிகர லாபமாக ரூ.186 கோடியும் ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.1,030 கோடியும், நிகர லாபமாக ரூ.2.50 கோடியும் ஈட்டியுள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+