பங்குச்சந்தை முதலீடுகளில் எப்போது ஒரு பங்கினை வாங்க போகிறோம் என்பதும் கூட அந்த பங்கு லாபத்தை கொடுக்குமா என்பதை தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். அப்படி ஒரு நிறுவனம் ரைட்ஸ் இஸ்யூவை வெளியிடும் போது அந்த பங்கின் போக்கு எப்படி இருக்கும்? என்பது குறித்து நிபுணரின் விளக்கத்தை பார்க்கலாம்..
ரைட்ஸ் இஸ்யூ என்றால் என்ன? ஒன் இந்தியா தமிழின் ஸ்டாக் பேச்சுக்கு பேட்டி அளித்துள்ள பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன், ரைட்ஸ் இஸ்யூ வெளியிடும் போது ஒரு நிறுவனத்தின் பங்கு இறக்கத்தில் தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

முதலில் ரைட்ஸ் இஸ்யூ என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனம், ஏற்கனவே அதில் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு தள்ளுபடி விலையில் கூடுதலாக பங்குகளை வாங்க வாய்ப்பு கொடுக்கும். இதுவே ரைட்ஸ் இஸ்யூ எனப்படுகிறது.
ஏற்கனவே பங்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த எண்ணிக்கையில் இருந்து பாதி என்ற அளவில் குறைந்த விலையில் பங்குகளை வாங்கலாம்.
சவுத் இந்தியன் வங்கியின் பங்கு வரலாறு: அந்த வகையில் தற்போது சவுத் இந்தியன் வங்கி ரைட்ஸ் இஸ்யூ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது சவுத் இந்தியன் வங்கியின் ஒரு பங்கின் மதிப்பு 32 ரூபாய் என்ற அளவில் நீடிக்கிறது. இந்நிலையில் ரைட்ஸ் இஸ்யூ மூலம் கூடுதலாக 1,151 கோடி ரூபாயை திரட்ட சவுத் இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படி முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கின் விலை தள்ளுபடியில் 22 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
ரைட்ஸ் இஸ்யூ வெளியிட்டின் போது ஒரு பங்கின் போக்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் என தர்மஸ்ரீ ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார். நிச்சயமாக சவுத் இந்தியன் வங்கியின் பங்கு மதிப்பு குறையும் ஆனால் பின்னாட்களில் உயரும் என தெரிவித்துள்ளார். இது போன்ற ரைட்ஸ் இஸ்யூ காலத்தில் புதிதாக அந்த நிறுவன பங்குகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
பங்குச்சந்தையில் சவுத் இந்தியன் வங்கியின் 52 வார கால மதிப்பானது 12.63 ரூபாயாக இருந்தது. 52 வார கால உச்சமாக ஒரு பங்கின் விலை 36.88 ரூபாய் வரை உயர்வு கண்டுள்ளது. இதன் சந்தை மூலதனம் 8,224 கோடி ரூபாயாகும். இந்நிறுவனத்தின் வருவாய் 8,045 கோடி ரூபாயாகும். இதன் லாபம் 2022இல் 45 கோடி ரூபாயாக இருந்து 2023இல் 775 கோடி என உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் பங்கு ஓராண்டு காலத்தில் 104% உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபம் தந்துள்ளது. சவுத் இந்தியன் வங்கியின் பங்குகளை பொறுத்தவரை சில்லறை முதலீட்டாளர்கள் வசமே 78.15% பங்குகள் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 14.68% பங்குகள் உள்ளன.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story Written by: Devika
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications