இந்தியாவில் வங்கி அல்லாத நிதி நிறுவன பிரிவில் அதிக சந்தை மூலதனத்துடன் சிறப்பாக செயல்படும் நிறுவனமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இருக்கிறது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் தான் தங்களுடைய முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்கு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
1 பங்கை 10ஆக மாற்றிய அறிவிப்பு: இதன்படி ஜூன் 13ஆம் தேதி அன்று பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்கு வழங்குவதற்கான ரெக்கார்ட் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பஜாஜ் பைனான்ஸில் பங்கு வைத்திருந்தவர்களுக்கு ஒவ்வொரு பங்கிற்கும் 4 பங்குகள் போனஸாக வழங்கப்படும் . இதன் மூலம் 1 பங்கு என்பது 5 பங்குகளாக உயர்ந்திருக்கும். இவை அனைத்து 2 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகள், இவை 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகளாக மாற உள்ளன. எனவே 1 பங்கு வைத்திருந்தவருக்கும் போனஸ் பங்கு மூலம் அது 5 ஆகவும், பின்னர் பங்கு பிரிப்பு மூலம் 10ஆக உயர்ந்திருக்கும்.

முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டாம்: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்டாக இந்த அறிவிப்பு வெளியானது. 1பங்கு என்பது 10ஆக மாறியுள்ளது. ஜூன்13ஆம் தேதி அன்று பஜாஜ் பைனான்ஸ் பங்கு வைத்திருந்தவர்களுக்கே இந்த வாய்ப்பு உண்டு. ஜூன் 16ஆம் தேதி அன்று இந்த பங்கு பிரிப்பு மற்றும் போனஸ் பங்குகளுக்கு ஏற்ப முதலீட்டாளர்களின் ஹோல்டிங் மதிப்பு 90% வரை சரிந்திருக்கும். இதனை கண்டு முதலீட்டாளர்கள் அச்சப்பட தேவையில்லை.
ஜூன் 27இல் டிமேட் கணக்கில் வரவு: ஏனெனில் பங்கு பிரிப்பு முடிந்து ஜூன் 27ஆம் தேதி உங்களின் போர்ட்போலியோவில் கூடுதல் பங்குகள் காட்டி விடும். முதலீட்டாளர்கள் பங்கு மதிப்பு ஒட்டு மொத்தமாக குறைந்துவிட்டதே என அச்சப்பட தேவையில்லை. நீங்கள் ஜூன் 13அன்று வைத்திருந்த பங்கு மதிப்பு அப்படியே தான் இருக்கிறது, அது 1 பங்கிடம் இருந்து 10ஆக பகிரப்படுவதே மதிப்பு குறைந்து காட்டுவதற்கு காரணம்.
1.87% வரை சரிவு: ஜூன் 13ஆம் தேதி அன்று பங்குச்சந்தை முடிவடையும்போது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 936 என்ற அளவில் வர்த்தகமானது. ஜூன் 16ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அதிகபட்சம் 956 வரை உயர்வு கண்டது பின்னர் 939 ரூபாய் என வர்த்தகத்தை முடித்தது. இந்த சூழலில் ஜூன் 17ஆம் தேதியான இன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகபட்சம் 949 ரூபாய் வரை உயர்ந்தது அதன் பின்னர் தொடர்ந்து இந்த பங்கு மதிப்பு சரிவில்தான் இருக்கிறது. கிட்டதட்ட 1.87 சதவீதம் வரை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்து 920 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.
பஜாஜ் பைனான்ஸ்: 5 ,73 ,889 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட மிகப்பெரிய ஒரு வங்கி சாராத நிதி நிறுவனமாக பஜாஜ் பைனான்ஸ் திகழ்ந்து வருகிறது. இதில் 54 சதவீத பங்குகள் பிரமோட்டர்களிடமும், வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் 21 சதவீத பங்குகளும் இருக்கின்றன. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்களின் டீமேட் கணக்குகளில் ஜூன் 27ஆம் தேதி இந்த புதிய பங்குகள் வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications