கடந்த மாதம் 22ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குததலில் சுற்றுலா பயணிகள் உட்பட மொத்தம் 26 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது.
பஹல்காம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் இந்திய பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை பங்குச் சந்தையில் கவனிக்கபடாமல் இருந்த டிரோன் மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகள் லைம் லைட்டுக்கு வந்தன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாதுகாப்பு பங்குகளின் விலை உயர்வுக்கு வழிவகுத்தன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஐடியாஃபோர்ஜ், ஜென் டெக்னாலஜிஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎம் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை 8 முதல் 50 சதவீதம் வரை லாபத்தை ஈட்டின.

கடந்த மாதம் நடந்த தீவிராவாத தாக்குதலுக்கு முன்பு ஐடியாஃபோர்ஜ் டெக்னாலஜி பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 58.47 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 50.31 சதவீதம் உயர்ந்துள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு பாரஸ் டிஃபென்ஸ் நிறுவன பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 29.57 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 16.59 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
ஏப்ரல் 22ம் தேதிக்கு முன்பு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 21.24 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 8.50 சதவீதம் உயர்ந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாரத் எலக்ட்ரானிக்ஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 16.99 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 17.30 சதவீதம் உயர்ந்துள்ளது.
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு முன்பு ஜென் டெக்னாலஜிஸ் பங்கு விலை அதன் 52 வார உச்ச விலையிலிருந்து 47.30 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இப்பங்கின் விலை 37.33 சதவீதம் உயர்ந்துள்ளது. டிஎஸ்பி மியூச்சுவல் .பண்டின் ஈக்விட்டிஸ் தலைவர் வினித் சாம்ப்ரே கூறுகையில், வலுவான ஆர்டர்புத்தக எதிர்பார்ப்பு மற்றும் புதிய ஆர்டர் அறிவிப்புகள் போன்றவற்றால் பாதுகாப்பு பங்குகளில் ஏற்றம் கண்டுள்ளது. நிச்சயமற்ற பொருளாதா சூழல் காரணாக நிறுவன விமர்சனங்கள் அமைதியாகவே உள்ளன. பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தல் சுழற்சிகள் பொதுவாக நீண்டதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்.. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications