பிரபல ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனம் எய்ஷர் மோட்டார்ஸ். இந்நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஒட்டு மொத்த அளவில் 2025 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,362 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும்.
2025 மார்ச் காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.5,241 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 23 சதவீதம் வளர்ச்சியாகும். அந்த காலாண்டில் எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.4,256 கோடி ஈட்டியிருந்தது.

கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் ராயல் என்பீல்டு 2.80 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 23.2 சதவீதம் அதிகமாகும். மேலும் முதல் முறையாக கடந்த 2024-25ம் நிதியாண்டில்தான் இந்நிறுவனம் 10 லட்சம் வாகன விற்பனை என்ற வருடாந்திர விற்பனை என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.
2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 10.02 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 8.1 சதவீதம் வளர்ச்சி கண்டு 9.02 லட்சம் வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 29.7 சதவீதம் ஏற்றம் கண்டு 1 லட்சம் மோட்டார் சைக்கிள்களாக அதிகரித்துள்ளது.
எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்று ரூ.70 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.48 சதவீதம் உயர்ந்து ரூ.5,446.90ஆக இருந்தது.
எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள், நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு வெளியானது. இந்நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருப்பதால், அதன் தாக்கம் இன்றைய பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
74 வயதிலும் கலக்கும் சூப்பர் ஸ்டார்.. கூலி படத்துக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications