DIvidend Stock in April 2023: பங்கு சந்தை முதலீட்டினை பொறுத்தவரையில் சரியான பங்குகளை தேர்வு செய்தால், அவை நிச்சயம் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு லாபத்தினை கொடுத்து கொண்டுள்ளன. நீண்டகால நோக்கில் பொதுவாக பங்குகள் கொடுக்கும் லாபம் என்பது வேறு. அதேசமயம் டிவிடெண்ட் உள்ளிட்ட பல வருமான ஆப்சன்களும் உள்ளன.

அந்த வகையில் 225 வருட பழமையான நிறுவனம் ஒன்று 2022 - 23ம் ஆண்டுக்கான இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் குறித்தான முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதெல்லாம் சரி? அதென்ன டிவிடெண்ட்? இதனால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? வாருங்கள் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும், நிறுவனங்கள் லாபம் ஈட்டும் போது, அந்த லாபத்தை பங்குதாரர்களுக்கு பகிர்ந்து அளிப்பது வழக்கம். இதனைத் தான் டிவிடெண்ட் அல்லது லாபப் பங்கு என கூறுவர். அந்த வகையில் 2022 - 23,ம் ஆண்டுக்கான இடைக்கால இரண்டாவது டிவிடெண்ட் ஆக முருகப்பா குழுமம் (EID Parry) ஏப்ரல் 10, 2023 ஆன இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முருகப்பா குழுமத்தின் வாரியக் கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. இதற்கு ஒப்புதலும் அளிக்கப்படலாம் என தெரிகிறது. ஆக மொத்தத்தில் முருகப்பா குழும முதலீட்டாளர்களுக்கு விரைவில் சர்ப்ரைஸ் இருக்கிறது என்றே கூறலாம்.

EID Parry பங்கு வரலாறு: பிஎஸ்இ தளத்தின் தகவல்கள் படி EID Parry நிறுவனம் மூன்றாவது காலாண்டிலேயே இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 5.50 ரூபாய் அறிவித்துள்ளது. எனினும் இதற்கு முன்னதாக 2020 காலகட்டத்தில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது கொரோனா காரணமாக வணிகம் முடங்கிய நிலையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனலாம்.
EID Parry மூன்றாவது காலாண்டு நிலவரம்: மூன்றாவது காலாண்டில் இந்த நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபமானது 22% அதிகரித்து, 482 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக கடந்த ஆண்டில் 395 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதமானது மூன்றாவது காலாண்டில் 727 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 6% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 686 கோடி ரூபாயாக இருந்தது.


Click it and Unblock the Notifications