2024 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சிறப்பான வெற்றியைப் பெறும் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளை கூறினாலும், பெரும்பாலான பங்குச்சந்தை ஆய்வாளர்கள் காத்திருந்து தேர்தல் முடிவுகளை தெரிந்துகொண்டு முதலீடு செய்வது உத்தமம் என கூறுகின்றனர்.
இந்தியப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை இன்று 4 சதவீதம் உயர்ந்து புதிய சாதனை உச்சத்தை எட்டின. திங்கட்கிழமை பங்குச்சந்தை உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் எக்சிட் போல் முடிவுகள் தான், எக்சிட் போல் மூலம் இந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கொள்கையில் தொடர்ச்சி என முதலீட்டுச் சந்தைக்குத் தேவையான விஷயங்களை உறுதி செய்யும் வகையில் ஆளும் கட்சியான பிஜேபி ஆட்சிக்கு வரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி (நாளை) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள வேளையில், இதற்கு முன்பு தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பங்குச் சந்தை எப்படிச் செயல்பட்டு உள்ளது என்பதை தெரிந்துகொள்வது முதலீட்டாளர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
S&P BSE சென்செக்ஸ் குறியீடு கடந்த நான்கு தேர்தல் முடிவுகள் வெளியான நாளுக்கு முன்பு முடிவுகளைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் உயர்ந்துள்ளது, இக்காலகட்டத்தில் சராசரியாக 11 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பங்குச் சந்தையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் எப்போதும் கவலைப்படுவதுண்டு. கடந்த நான்கு தேர்தல் முடிவுகளின் நாளில் பங்குச் சந்தையில் நிலவிய சூழ்நிலையை இங்கே பார்ப்போம்.
மே 13, 2004
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.77 சதவீதம் மற்றும் 0.37 சதவீதம் உயர்ந்து 5,399.47 மற்றும் 1,717.5 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 5,487.34 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 5,131.03
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 1,750.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 1,625.10
மே 16, 2009 (16th May 2009)
சென்செக்ஸ் குறியீடு 2.53 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில், நிஃப்டி குறியீடு 17.74 சதவீதம் உயர்ந்து முறையே 12,173.42 மற்றும் 4,323.15 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 14,284.21 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 13,479.39
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 4384.30 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 3673.15
மே 16, 2014 (16th May 2014)
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் முறையே 0.90 சதவீதம் மற்றும் 1.12 சதவீதம் ஓரளவு உயர்ந்து முறையே 24,121.74 மற்றும் 7,203 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 25,375.63 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 23,873.16
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 7,563.50 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 7,130.65
மே 23, 2019 (23rd May 2019)
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டுமே கிட்டத்தட்ட நிலையாக இருந்தன, சென்செக்ஸ் 0.76 சதவீதமும் மற்றும் நிஃப்டி 0.69 சதவீதமும் சரிந்து முறையே 38,811.39 மற்றும் 11,657.05 புள்ளிகளில் முடிந்தன.
சென்செக்ஸ் இன்டிராடே உயர்வு: 40,124.96 | சென்செக்ஸ் இன்டிராடே தாழ்வு: 38,651.61
நிஃப்டி இன்டிராடே உயர்வு: 12,041.15 | நிஃப்டி இன்டிராடே தாழ்வு: 11,614.5
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications