பொதுத்துறை வங்கிகளுக்கான மத்திய அரசின் 2.11 லட்சம் கோடி ரூபாய் நிதி உட்செலுத்துதல் திட்டம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டை குவிக்க முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் சென்செக்ஸ் 480 புள்ளிகள் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் இன்று அக்டோப்ர மாதத்திற்கான ஆர்டர்கள் முடிவடையும் நிலையில் இன்று மந்தமான வர்த்தகத்தை மட்டுமே மும்பை பங்குச்சந்தை பெற்றது.
மும்பை பங்குச்சந்தை
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சரிவுடன் துவங்கி மும்பை பங்குச்சந்தை, ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தின் மூலம் கணிசமான முதலீட்டை பெற்றது. இதன் மூலம் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
சென்செக்ஸ்
இன்று வர்ததக துவக்கத்தில் 20 புள்ளிகள் குறைவாக துவங்கிய நிலையில், அதிகப்படியாக 80 புள்ளிகள் வரையிலான சரிவை சந்தித்தது. மதியம் 12.15 மணிக்கு மேல் உயர துவங்கி சென்செக்ஸ் வர்த்தக முடிவில் 104.63 புள்ளிகள் வரையிலான உயர்வை சந்தித்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போல் நிஃப்டி குறியீடும் சரிவுடன் துவங்கினால் வர்த்தக முடிவில் 48.45 புள்ளிகள் உயர்ந்து 10,343.80 புள்ளிகளை அடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சிப்லா, மாருதி, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை சந்தித்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான நஷ்டம் அடைந்த நிறுவனங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications
