3 ஆண்டுகளுக்கு முன் வெறும் 75 காசுதான்.. அந்த மல்டிபேக்கர் பங்கு விலை இப்போ எவ்வளவு தெரியுமா?

ஸ்மால்கேப் நிறுவனமான ஏராயா லைஃப்ஸ்பேசஸ், இணையதளங்கள், ஆப்ஸ் மற்றும் பிற டிஜிட்டல் பிளாட்பார்ம்களுக்கான டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் நிறுவனங்களை இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் மூலம் தனது போர்ட்ஃபோலியாவை பன்முகப்படுத்த முயல்கிறது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்தது.

2024 டிசம்பர் காலாண்டில் ஏராயா லைஃப்ஸ்பேஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் 3,584 சதவீதம் உயர்ந்து ரூ.666.11 கோடியாகவும், நிகர லாபம் 130 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.53 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் 2024 டிசம்பர் மாதத்தில் 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது, ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரித்தது.

3 ஆண்டுகளுக்கு முன் வெறும் 75 காசுதான்.. அந்த மல்டிபேக்கர் பங்கு விலை இப்போ எவ்வளவு தெரியுமா?

மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகரித்து ரூ.59.49ஆக இருந்தது. நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 7,455 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இப்பங்கின் விலை ரூ.0.75லிருந்து ரூ.56.66ஆக உயர்ந்துள்ளது.

2024 அக்டோபர் 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவன பங்கின் விலை 52 வார உச்சமான ரூ.316.90ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இம்மாதம் 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 குறைந்தபட்சமான ரூ.48.75க்கு சென்றது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சத்தை காட்டிலும் சுமார் 82 சதவீதம் குறைவாக உள்ளது.

2024 டிசம்பர் இறுதி நிலவரப்படி, ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் 35.13 சதவீத பங்குகள் உள்ளன. அன்னிய முதலீ்ட்டாளர்கள் வசம் 22.63 சதவீத பங்கு மூலதனம் உள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 1.83 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். எஞ்சிய 40.41 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

கடந்த ஆண்டு ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய கனவு ஒன்று நிறைவேறியது. 2024 ஜூனில் அமெரிக்காவை சேர்ந்த எபிக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களையும் ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. சுமார் 36.10 கோடி டாலர் கொடுத்து இந்த நிறுவனங்களை ஏராயா லைஃப்ஸ்பேசஸ் நிறுவனம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

4 மாதத்தில் 150-270 சதவீதம் வரை லாபம்.. இந்த 5 மல்டிபேக்கர் பங்குகள் உங்களிடம் இருக்கா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+