விநாயகரே கூட காப்பாற்ற இயலாத இந்திய ரூபாய் (rupee) மதிப்பு - ஏற்றத்தில் சந்தை

By மு.சா.கெளதமன்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 72.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,442.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 50 பங்குகளில் 43 பங்குகள் ஏற்றம் கண்டும், ஏழு பங்குகள் இறக்கம் கண்டும் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸில் 205.57 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,923.53 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றன. சென்செக்ஸின் 30 பங்குகளில் 26 பங்குகள் ஏற்றத்திலும், நான்கு பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகாகி வருகின்றன. பி.எஸ்.இ-ல் 1522 பங்குகள் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அதில் 1,198 பங்குகள் ஏற்றத்திலும், 266 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. 58 பங்குகள் விலை மாற்றம் இன்றி வர்த்தகமாகி வருகின்றன.

 

விநாயகரே கூட காப்பாற்ற இயலாத இந்திய ரூபாய் மதிப்பு

ஆசியச் சந்தைகளான நிக்கி 225, ஹேங்செங், ஸ்ரைட் டைம்ஸ், தைவான் வெயிட்டெட், கோஸ்பி ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஐரோப்பிய சந்தைகளான எஃப்.டி.எஸ்.இ 100, சிஏசி 40 சந்தைகள் நேற்று இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்திருப்பது கவனிக்கத் தக்கது. அமெரிக்க சந்தையான நாஸ்டாக் ஏற்றத்தில் நிறைவடைந்திருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் (rupee) மதிப்பு மேலும் 21 பைசா குறைந்து 71.82 ஆக மீண்டும் புதிய உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றன. கச்சா எண்ணெயின் விலையும் அமெரிக்க டாலர் போல அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

ஐடி மற்றும் புகையிலை துறை சார்ந்த பங்குகள் தவிர மற்ற பங்குகள் எல்லாம் ஏற்றத்திலேயே வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை தவிர அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகித கூட்டம் வேறு நம் மார்க்கெட் செண்டிமெண்டை மாற்றக் காத்திருப்பதால் வர்த்தகர்கள் சற்று கவனமாக வர்த்தகங்களை மேற்கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sensex openingbell nifty market rupee
English summary

Even Lord Ganesha is Not Able to Stop Rupee Falling #Opening Bell

Even lord Ganesha is not able to stop rupee falling, the market is going up but the rupee is still falling and touching new low every day.
Story first published: Friday, September 14, 2018, 10:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X