இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம், கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைந்தது, இந்திய பங்குகளில் அன்னிய முதலீடு போன்ற காரணங்களால் கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2.876 புள்ளிகள் உயர்ந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் இன்டெக்ஸ்கள் முறையே 7 மற்றும் 9 சதவீதம் உயர்ந்தன.
குழப்பம்
கடந்த திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான ஐந்தே நாட்களில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.26.5 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. சென்ற வாரம் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. தற்போது பல முன்னணி நிறுவன பங்குகளின் நன்கு உயர்ந்துள்ளது. இதனால் பங்குகளை வாங்கலாமா அல்லது விற்கலாமா என்ற குழப்பத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் அஜித் மிஸ்ரா கூறுகையில், இன்டெக்ஸ் 3 வார வரம்பிலிருந்து வெளியேறி, தற்போது 25,200-25,600 அளவுகளை இலக்காக கொள்ளலாம். சந்தை சரிவில் பங்குகளை வாங்கும் அணுகுமுறையை பின்பற்றும்படி முதலீட்டாளர்களை அறிவுறுத்துகிறோம். அனைத்து முக்கிய துறைகளும் சுழற்சி அடிப்படையில் ஏற்றத்தில் பங்கேற்பதால், சாதகமான ஆபத்து-வெகுமதி சுயவிவரத்தின் அடிப்படையில் பங்குகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்தார்.
பெரிய பங்குகள்
வாட்டர்ஃபீல்ட் அட்வைசர்ஸின் விபுல் போவர் கூறுகையில், பெரிய அளவிலான பங்குகளுக்கு முன்னுரிமை அளித்து, தவணைகளில் முதலீடு செய்யுமாறு ஆலோசகர்களாக நாங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கிறோம். நிஃப்டி இன்டெக்ஸ் மதிப்பீடுகள் நீண்ட கால சராசரிக்கு அருகில் உள்ளன. ஆனால் நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பங்குகள் ஒப்பீட்டளவில் அதிகமாக கருதப்படுகின்றன.
இது தற்போதைய சந்தை நிலைகளில் அபாயங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் இல்லாவிட்டாலும், தற்போதைய நிறுவன நிதி நிலை முடிவுகள் சீசன் பலர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக மாறியுள்ளது என்று தெரிவித்தார். குவாண்டம் ஏஎம்சியின் கிறிஸ்டி மத்தாய் கூறுகையில், சந்தையின் பெரும்பாலான பகுதிகளில் மதிப்பீடுகள் விலை உயர்ந்ததாகவே உள்ளன.
மிதமான வருமானம்
நீங்கள் நிஃப்டி 50ஐ பார்த்தால், 21 5x மதிப்பீடு விலை உயர்ந்தது. 6-8 மாதங்களுக்கு முன்பு நாங்கள் சந்தையில் மிகவும் ஆக்கப்பூர்கவமாக இருந்தோம். ஆனால் முதலீட்டாளர்கள் இப்போது மிதமான வருமானத்தை பார்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,330.59 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 25,019.80 புள்ளிகளிலும் முடிவுற்றது.
நெருங்கும் மே 23.. காத்திருக்கும் 2 சம்பவங்கள்.. என்ன செய்ய போகிறார் அனில் அம்பானி..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications