நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையில் பலமான ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியில் பல நல்ல பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன.
அந்த வகையில் நாம் இன்று டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா ஸ்டீல் பங்கினைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
டாடா ஸ்டீல் சரிவு
டாடா ஸ்டீல் பங்கு விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது 1142 - 885 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. சுமார் 22% சரிவினைக் கண்டுள்ளது.
இப்பங்கின் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 885.25 ரூபாயாக முடிவடைந்தது.
இலக்கு விலை
இது 1.64% சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கினை வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இதன் இலக்கு விலை 1045 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதனை 875 - 895 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் - 799 ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது 3 மாதத்தில் எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த சரிவு
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் படி, நிஃப்டி மே மாத தொடக்கத்தில் இருந்து சந்தைகள் பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. உலக பொருளாதாரத்தின் மந்த நிலைக்கு மத்தியில், உலோக பங்குகள் விலை பலத்த சரிவில் காணப்படுகின்றன. இதில் டாடா ஸ்டீல் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
அதிகரிக்கலாம்
குறிப்பாக சமீபத்திய உச்சத்தில் இருந்து 45% சரிவில் காணப்படுகிறது. எனினும் வரவிருக்கும் நாட்களில் இப்பங்கின் விலையானது ஏற்றத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகாலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பங்கின் விலையானது தொடர்ந்து 900 ரூபாயாக வர்த்தகமானால், மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய லெவல்
அதேபோல கீழாகவும் அதிகளவில் குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சப்போர்ட் லெவல் 840 - 850 ரூபாயாக கணித்துள்ளது. ஆக இந்த லெவகளில் ஏதேனும் ஒரு லெவலை உடைக்கும் பட்சத்தில் இப்பங்கினில் நல்ல மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே இப்பங்கின் விலையானது 900 ரூபாய் என்ற லெவலிலேயே காணப்படுகின்றது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
டாடா ஸ்டீல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல வளர்ச்சியினை காட்டி வரும் நிலையில், சி ஏ ஜி ஆர் விகிதமானது 76 சதவீதத்திற்கு மேலாக காணப்படுகின்றது. இதன் வளர்ச்சி விகிதம் வரவிருக்கும் மாதங்களில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications