கடந்த டிசம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நிலைப்பாட்டில் நிலையற்ற தன்மை, கடும் அழுத்தத்தில் ஐடி பங்குகள், டாலர் இன்டெக்ஸ் அதிகரிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இன்று காலையில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடிவாங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது.
இந்த சூழ்நிலையிலும், இன்ராடே வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ரூ.100க்கும் குறைவான 3 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ்,ஈஸி டிரிப் பிளானர்ஸ் மற்றும் சர்லா பெர்ஃபாமன்ஸ் ஃபைபர்ஸ் ஆகிய 3 நிறுவன பங்குகளும் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.அதேசமயம், இந்த பங்குகளில் முதலீடு செய்யும்போது, கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹென்செக்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி பிரிவின் ஏவிபி மகேஷ் எம் ஓஜா கூறுகையில், இன்றைய வர்த்தகத்துக்கு மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் பங்குகளை வாங்கலாம். இன்றைய வர்த்தகத்தின் போது இந்நிறுவன பங்குகளை ரூ.59-ரூ.60.50 வரை வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.61.50 மற்றும் ரூ.63.00ஆகும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.61.04ஆக இருந்தது.
Story written by: Subramanian
எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா, இன்றைய வர்த்தகத்துக்கு ஈஸி டிரிப் பிளானர்ஸ் பங்கினை பரிந்துரைக்கிறார். இந்நிறுவன பங்கினை ரூ.12 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.12.70ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.11.60 என்று தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.12.21ஆக இருந்தது.
லட்சுமிஸ்ரீ இன்வெஸ்மென்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அன்ஷூல் ஜெயின் இன்று சர்லா பெர்ஃபாமன்ஸ் ஃபைபர்ஸ் நிறுவன பங்குகளை ரூ.76க்கு வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.81ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.73ஆக கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.76.85ஆக இருந்தது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications