இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் காளையின் ஆதிக்கம் நிலவியது. இந்நிலையில், வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. பங்குச் சந்தையில் இன்று இன்ட்ராடே வர்த்தகத்தில் நல்ல லாபம் பார்க்க வாய்ப்புள்ள ரூ.100க்கும் குறைவான 4 நிறுவன பங்குகளை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில், எஸ்ஏஎச் பாலிமர்ஸ்,பசுபதி அக்ரிலான், லாயிட்ஸ் இன்ஜினியரிங் மற்றும் எடெல்வைஸ் பைனான்ஸ் சர்வீசஸ் ஆகிய 4 நிறுவன பங்குகளும் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.அதேசமயம், இந்த பங்குகளில் முதலீடு செய்யும்போது, கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகடியா கூறுகையில், பிபி நெய்த பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், எஸ்ஏஎச் பாலிமர்ஸ் பங்குகளை ரூ.93.27 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.100 ஆகும். அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.90 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எஸ்ஏஎச் பாலிமர்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ.92.39ஆக இருந்தது.

பசுபதி அக்ரிலான் நிறுவன பங்கினை ரூ.44.63 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.48ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.42 என தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் பசுபதி அக்ரிலான் பங்கு விலை ரூ.45.14ஆக இருந்தது.
எஸ்எஸ் வெல்த்ஸ்ட்ரீட்டின் நிறுவனர் சுகந்தா சச்தேவா கூறுகையில், லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவன பங்கினை ரூ.58.80 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.62.50ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.56.60என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் லாயிட்ஸ் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் பங்கு விலை ரூ.61.04ஆக இருந்தது.
லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ரிசர்ச் பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், எடெல்வைஸ் பைனான்ஸ் சர்வீசஸ் பங்கினை ரூ.94 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.100 என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப்லாஸ் ரூ.92ஆக கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.94.43ஆக இருந்தது


Click it and Unblock the Notifications