இந்த பங்குகளின் விலை ரூ.100க்கு கம்மிதான்.. இன்ட்ராடே வர்த்தகத்துக்கு சூப்பரான 4 பங்குகள்.!!

பொதுவாக பங்குச் சந்தையில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். இதனால் பெரும்பாலான சில்லரை முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்த வருகின்றனர். இருப்பினும் குறுகிய காலத்தில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் பலரும் இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். தினசரி வர்த்தகம் தொடங்கி அது நிறைவடைவதற்குள் பங்குகளை வாங்கி விற்பனை செய்து லாபம் சம்பாத்திக்கின்றனர்.

சரியான விலை
நல்ல பங்குகளை சரியான விலையில் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றால் இது சாத்தியம்தான். அந்த வகையில் இன்றைய (மே 16) இன்ட்ராடே வர்த்தகத்துக்கு வாங்கி விற்பதற்கு சிறந்த ரூ.100க்கு குறைவான விலையுள்ள 4 நிறுவன பங்குகளை பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த பங்குகளின் விலை ரூ.100க்கு கம்மிதான்.. இன்ட்ராடே வர்த்தகத்துக்கு சூப்பரான 4 பங்குகள்.!!

சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுமீத் பகாடியா, இன்டர்நேஷனல் கன்வேயர்ஸ் மற்றும் ஸ்பிக் ஆகிய இரண்டு நிறுவன பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இன்டர்நேஷனல் கன்வேயர்ஸ் பங்கினை ரூ.81.36 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.87. அதேசமயம் இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.78ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில்எஸ்பிஐசி பங்கின் விலை ரூ.81.19ஆக இருந்தது.

சதர்ன் பெட்ரோகெமிக்கல்ஸ்
சதர்ன் பெட்ரோகெமிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (எஸ்பிஐசி) நிறுவன பங்கினை ரூ.88.61 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.95ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வேளை இப்பங்கின் விலை சரிய தொடங்கினால் வெளியேறிய வேண்டிய விலை அல்லது ஸ்டாப் லாஸ் ரூ.85.50ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில்எஸ்பிஐசி பங்கின் விலை ரூ.88.64ஆக இருந்தது.

ஆனந்த் ரதியின் தொழில்நுட்ப ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் மெஹூல் கோத்தாரி கூறுகையில், சவுத் இந்தியன் பேங்க் பங்கினை ரூ.27.50 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.29.50. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.26.20ஆக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.27.77ஆக இருந்தது.

சிமெண்ட் கம்பெனி
லட்சுமி ஸ்ரீ இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் செக்யூரிட்டீஸின் ஆரசாய்சி பிரிவு தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், ஸ்ரீ திக்விஜய் சிமெண்ட் நிறுவன பங்கினை ரூ.79.50 என்ற விலையில் வாங்கலாம். இப்பங்கின் இலக்கு விலை ரூ.90ஆக கணிக்கப்பட்டுள்ளது. இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.75ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.80.37ஆக இருந்தது. இன்ட்ராடே வர்த்தகர்கள் செய்பவர்கள் கட்டாயம் ஸ்டாப் லாஸ் போட்டு வர்த்தகம் செய்ய வேண்டும்.

இது கொஞ்சம் புதுசு..! டிவிடெண்டு வழங்கும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்.. எந்த கம்பெனி தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+