ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட். இந்நிறுவனம் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் செய்த ஒரு சம்பவம் அதன் பங்குதாரர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்த போதிலும், தனது பங்குதாரர்களுக்கு 20 சதவீதம் டிவிடெண்டு அறிவித்துள்ளது.
வருவாய்
2025 மார்ச் காலாண்டில் ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.135.20 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.20.64 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.391.87 கோடியாக குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.683.04 கோடி ஈட்டியிருந்தது.

கடந்த மார்ச் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளபோதிலும், தனது பங்குதாரர்களுக்கு வழக்கம் போல் டிவிடெண்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.2 (20 சதவீதம்) டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.
ஒப்புதல்
அடுத்த 128வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு டிவிடெண்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்நிறுவனம், 2024 ஜூலையில் பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்டு வழங்கியது. 2023, 2022 மற்றும் 2021ம் ஆண்டுகளில் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு முறையே ரூ.5, ரூ.4 மற்றும் ரூ.1 டிவிடெண்டு வழங்கியது.
நீண்ட கால அடிப்படையில் ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 600 சதவீதத்துக்கு மேல் பெருக்கியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 164 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.97 சதவீதம் உயர்ந்து ரூ.2,045.85ஆக இருந்தது. கடந்த பிப்ரவரி 28ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.1,638க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.22,851 கோடியாக உள்ளது.
இந்த 7 பென்னி பங்குகள் வேண்டவே வேண்டாம்... முதலீட்டாளர்களை எச்சரித்த பிஎஸ்இ.. உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications