4 நாளில் ரூ.4 லட்சம் கோடி உயர்வு.. ஸ்மால்கேப் வலையில் சிக்கிவிடாதீங்க... எச்சரிக்கும் நிபுணர்கள்..

தொடர்ந்து 5 மாதங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வாரம் சிறிய ஏற்றத்தை சந்தித்தன. குறிப்பாக கடந்த 4 வர்த்தக தினங்களில் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் 6.6 சதவீதம் உயர்ந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடி உயர்ந்தது. இந்த அதிரடி மாற்றம், விரக்தியின் விளிம்பில் இருந்த ஸ்மால்கேப் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை தூண்டியுள்ளது.

அதேசமயம், பெரும்பாலான ஸ்மால்கேப் பங்குகளின் விலை அவற்றின் உச்சவிலையிலிருந்து குறைந்தபட்சம் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளன. அதாவது ஸ்மால்கேப் பங்குகள் இன்னும் கரடியின் பிடியில்தான் உள்ளன என்பதை இது உணர்த்துகிறது.

4 நாளில் ரூ.4 லட்சம் கோடி உயர்வு..  ஸ்மால்கேப் வலையில் சிக்கிவிடாதீங்க... எச்சரிக்கும் நிபுணர்கள்..

இதனால் தற்போதைய ஸ்மால்கேப் குறியீட்டின் எழுச்சி ஒரு நிலையான மீட்சியின் தொடக்கமா அல்லது கடுமையான சரிவு அதனை தொடர்ந்து சிறிய மீட்சியை குறிக்கும் W வடிவ சந்தையை நிலையை காட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தரகு நிறுவனமான மோதலிலால் ஓஸ்வால் கூறுகையில், ஸ்மால்கேப் கரடி சந்தை இன்னும் மதிப்பீடுகளை போதுமான அளவு கவர்ச்சிகரமானதாக மாற்றவில்லை. நிப்டி 50 தற்போது அதன் நீண்ட கால சராசரியை விட 9 சதவீதம் குறைவாக வர்த்தகம் ஆகி வருகிறது. அதேநேரத்தில், ஸ்மால்கேப் இன்டெக்ஸ்கள் முறையே 22 சதவீதம் மற்றும் 25 சதவீதம் சராசரியை விட அதிகமாக உள்ளன என தெரிவித்தது.

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ராஜேஷ் பால்வியா கூறுகையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் துறையில் இன்னும் கொஞ்சம் மீட்சியை காணலாம். ஆனால் நிப்டி 22,400க்கு மேல் நிலையாக வைத்திருக்கும் வரை ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தையில் ஏற்கனவே அதிகமாக விற்கப்பட்ட பங்குகளை வாங்க முயற்சிக்கலாம். வர்த்தக பக்கத்தில் சில வாய்ப்புகள் இருக்கும். ஆனால் நிப்டி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஆகியவற்றுக்கான கட்டமைப்பு பலவீனமாக உள்ளது என்று தெரிவித்தார்.

சந்தை ஆலோசகர் சந்தீப் சபர்வால் கூறுகையில், கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விற்பனை ஒட்டு மொத்த சந்தையை அதன் நியாயமான மதிப்பிற்கு கீழே கொண்டு வந்துள்ளது. மேலும் சில சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பிரிவுகளில் இன்னும் உபரிகள் இருந்தாலும், இந்த பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களும் நல்ல மதிப்பு மண்டலத்திற்குள் வந்துள்ளன. சந்தையின் அடுத்த கட்ட எழுச்சியின் முதல் கட்டத்தை பெரிய நிறுவனங்கள்தான் வழிநடத்த முடியும், பின்னர் நிலைப்படுத்தலாம். பின்னர் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களும் இதில் இணையலாம் என்று தெரிவித்தார்.

ஒட்டு மொத்த அளவில், ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பீடுகள் இன்னும் அதிகமாகவும், சந்தை உணர்வு பலவீனமாகவும் இருப்பதால் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறந்த ரிஸ்க்-சரிசெய்யப்பட்ட வருமானத்திற்காக, அடிப்படை வலுவாக உள்ள லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தலாம், ஸ்மால்கேப் முதலீடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் முதலீட்டாளர்கள் இருப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Story written: subramanian

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+