ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் நாட்டின் முன்னணி மருந்து ஆலோசனை மற்றும் கிளீன்ரூம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பங்குச் சந்தையில் இந்நிறுவனம் ஒரு மூன்று மாத குழந்தைதான். இந்த ஆண்டு ஜனவரியில்தான் இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, அதனை தொடர்ந்து பங்குச் சந்தைகளில் அதன் பங்குகள் பட்டியலிடப்பட்டது. ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கி 7ம் தேதி நிறைவடைந்தது. ஐபிஓவில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை ரூ.85ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஐபிஓவின் வெளியீட்டு அளவை காட்டிலும் அதிகளவில் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் குவிந்ததால் ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெற்றியடைந்தது. இதனையடுத்து கடந்த ஜனவரி 10ம் தேதியன்று BSE SME தளத்தில் இந்நிறுவன பங்குகள் ரூ.161.50க்கு பட்டியலிடப்பட்டது. ஐபிஓ வெளியீட்டு விலையை காட்டிலும் 90 சதவீதம் கூடுதல் விலையில் பங்குகள் பட்டியலிடப்பட்டதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மிரட்டல்களால் இந்திய பங்குச் சந்தைகள் அடி மேல் அடி வாங்கி கொண்டிருந்த கால கட்டத்தில், இந்நிறுவன பங்கு தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்த வந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். குறிப்பாக இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதித்தார். இதனால் கடந்த 3ம் தேதியன்று இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. ஆனால் அன்றைய தினம் ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் பங்கு விலை புதிய உச்ச்தை தொட்டது. அன்றைய தினம் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய உச்சமான ரூ.350.80ஐ எட்டியது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்கச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் பங்கு விலை ரூ.346.40ல் முடிவுற்றது. இந்த விலை, அதன் ஐபிஓ விலையை காட்டிலும் சுமார் 310 சதவீதம் அதிகமாகும். ஆக, மூன்றே மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 310 சதவீதம் மல்டி பேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவனம் கெல்வின் ஏர்கண்டிஷனிங் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் தனது உரிமை பங்குகளை 51 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
ஃபேப்டெக் டெக்னாலஜிஸ் கிளீன்ரூம்ஸ் நிறுவனம் தனது போர்ட்ஃபோலியாவில் எச்விஏசி நிபுணத்துவதை ஒருங்கிணைப்பதற்கான ஒரு மூலோபாய கூட்டணியின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டில் கெல்வினில் மூன்றில் ஒரு பங்கு பங்குகளை வாங்கியது. தற்போது கெல்வின் நிறுவனத்தில் தனது பங்குகளை 51 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications