இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து முதலீடுகளை திரும்ப பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட இரண்டு தங்க நகை கடை பங்குகளில் மட்டும் முதலீடுகளை அதிகரித்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தில் பங்குகளை அதிகரிக்கிறார்கள் என்றால் நிச்சயம் அது தங்க முட்டையிடும் வாத்தாக இருக்கும் என்பது தான் முதலீட்டாளர்களின் எண்ணம். இதனால் சில்லறை முதலீட்டாளர்களும் இந்த இரண்டு தங்க நகை கடை பங்குகளை அதிகம் வாங்க தொடங்கியுள்ளனர்.
பி.என். காட்கில் ஜுவல்லர்ஸ் (P N Gadgil Jewellers) : இந்நிறுவனத்தில் QIP மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர். ஜூன் மாதத்தில் வெறும் 0.48%-ஆக இருந்த பங்கு விகிதம் செப்டம்பர் நிலவரப்படி 3.83% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே காலாண்டில் சுமார் 8 மடங்கு பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூடுதலாக வாங்கியுள்ளனர்.

நடப்பு நிதி ஆண்டின் முதல் பாதியில், பி.என். காட்கில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ஆண்டு அடிப்படையில் 30.5% அதிகரித்து 5,079 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. லாபம் அதைவிட வேகமாக வளர்ந்து, EBITDA 56.3% அதிகரித்து 417 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 52.3% அதிகரித்து 226 கோடி ரூபாயு என உயர்ந்துள்ளது. இந்நிறுவனம் அதிக லாபம் தரக்கூடிய 'Studded Jewellery' வகை நகைகளை அதிகம் விற்பனை செய்ய தொடங்கியதே இதற்கு காரணம். இந்நிறுவன பங்கின் தற்போதைய விலை 589 ரூபாயாக உள்ளது.
ஸ்கை கோல்டு & டமண்ட்ஸ் (Sky Gold & Diamonds) : வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தாங்களாகவே தொடர்ந்து நேரடி பங்குச்சந்தைகள் மூலமாகவே இந்த பங்குகளை அதிகமாக வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் FIIகள் இதில் தங்கள் பங்குகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு 3% உயர்வு கண்டுள்ளது.
ஸ்கை கோல்டு நிறுவன பங்கின் தற்போதைய விலை 951 ரூபாயாக உள்ளது, கடந்த நிதி ஆண்டில் 2405 கோடி ரூபாய் வருவாயும் 129 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது. கடந்த ஓராண்டில் 174% வளர்ச்சியை அடைந்துள்ளது இந்த பங்கு.
ஸ்கை கோல்டு நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தை விலையிலேயே போட்டிபோட்டு பங்குகளை வாங்குவது, அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையையும், அதன் வலுவான பணப்புழக்கத்தையும் பிரதிபலிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

