இந்திய பங்கு சந்தையானது இன்று தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய நிலையில், முடிவில் சென்செக்ஸ் 773.69 புள்ளிகள் சரிவினைக் கண்டு, 60,205 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிப்டி 226.35 புள்ளிகள் குறைந்து, 17,891 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் பி எஸ்.இயில் உள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனமானது, 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
இது மதியம் 1.06 மணியளவில் சென்செக்ஸ் 655.27 புள்ளிகள் குறைந்து, 60,323.48 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 197.95 புள்ளிகள் குறைந்து, 17,920 புள்ளிகளாகவும் வர்த்தகமாகியது. இது இன்று காலை அமர்வில் கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் வரையில் சரிவினைக் கண்டது. எனினும் தற்போது சற்றே ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.
அனைத்து குறியீடுகளும் சரிவு
இன்றைய சந்தை அமர்வில் அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி PSU வங்கி, 3.7% சரிவிலும், பேங்க் நிஃப்டி 2.3% சரிவிலும் காணப்படுகின்றது. மற்ற குறியீடுகள் பெரும்பாலும் 1% மேலாக சரிவிலேயே காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, ஹெச் யு எல், ஹிண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மாருதி சுசூகி, ஹெச்.யு.எல், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
என்ன காரணம்?
இது வரவிருக்கு பட்ஜெட் 2023 பற்றிய எதிர்பார்ப்புகள், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், சர்வதேச வளர்ச்சி என பல காரணிகளும் சந்தையில் செல்லிங்கினை தூண்டியுள்ளது.
இதற்கிடையில் மார்கன் ஸ்டான்லி நிதி பற்றாக்குறை 2024ம் நிதியாண்டில் 5.9% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2023ம் நிதியாண்டில் 6.4% ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சந்தையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
அன்னிய முதலீடுகள்
கடந்த ஆண்டினை போலவே இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டும் அன்னிய முதலீடுகளானது வெளியேறி வருகின்றது. இதுவரையில் பங்கு சந்தையில் இருந்து மட்டும் 1.6 பில்லியன் டாலர் அளவுக்கு வெளியேற்றம் கண்டுள்ளது.
வளர்ச்சி விகிதம் சரிவு
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 5.6 சதவீதமாக சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி20 நாடுகளில் ஒரு சிறந்த பொருளாதார நாடாக இருக்கும் இந்தியாவில், வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
எஃப் & ஓ
எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி நாளை பங்கு சந்தை விடுமுறை என்பதால் இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி ஆகும். ஆக இதுவும் சந்தையில் ஏற்ற இறக்கத்தினை அதிகரித்துள்ளது. இது சந்தையில் அழுத்தத்தினை அதிகரித்துள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி குழு
அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி குழுவானது வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? அல்லது மாற்றம் செய்யாமல் இருக்குமா? இது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆக இதனையும் முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications