பங்குகளை கைகழுவும் FII.. முழுசா ரூ.1 லட்சம் கோடி.. நீங்க இதுல முதலீடு செய்துள்ளீர்களா..? உஷார்..!

இந்தியாவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பு ஏற்பட்ட சரிவை பயன்படுத்த பல கோடி இளம் முதலீட்டாளர்கள் முதலீட்டு சந்தைக்குகள் புதிதாக நுழைந்துனர். இந்த எண்ணிக்கை அடுத்த 5 வருடத்தில் வேகமாக உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தையில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான 6 துறைகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.

பங்குகளை கைகழுவும் FII.. முழுசா ரூ.1 லட்சம் கோடி.. நீங்க இதுல முதலீடு செய்துள்ளீர்களா..? உஷார்..!

தகவல் தொழில்நுட்பம் (IT), FMCG, ஆட்டோமொபைல், நுகர் சேவைகள், மின்சாரம், மற்றும் நுகர் பொருட்கள் ஆகிய ஆறு முக்கிய துறைகளில் இருந்து அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த திடீர் விற்பனைக்கு உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, அதீத மதிப்பீடுகள், மற்றும் வருவாய் தடுமாற்றம் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன. FII அப்படி ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பங்குகளை விற்பனை செய்துள்ளனர்..? வாங்க விளக்கமாக பார்ப்போம்.

தகவல் தொழில்நுட்பம் (IT) துறையில் சுமார் ரூ.33,479 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அமெரிக்க சந்தையில் IT செலவினங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தத் துறை பெரும் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது.

FMCG துறையில் FII முதலீட்டாளர்கள் இந்த 6 மாதத்தில் ரூ.17,819 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இத்துறையில் இருக்கும் நிறுவன பங்குகள் அதிக மதிப்பீடுகள் மற்றும் உள்நாட்டில் மந்தமான தேவை நிலவும் காரணத்தால் இந்த சரிவு பதிவாகியுள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் ரூ.16,058 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. வாகனத் துறையில் உற்பத்தி மற்றும் விற்பனை மந்தநிலை உள்ளது. இதோடு சீனாவின் அரிய உலோக காந்தம் பிரச்சனையும் இத்துறையை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் கன்ஸ்யூமர் சேவை பிரிவில் ரூ.14,417 கோடி மதிப்பிலான பங்குகளும், மின்சார துறையில் ரூ.12,231 கோடி மதிப்பிலான பங்குகளும், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் பிரிவில் ரூ.11,296 கோடி மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யபப்டு உள்ளது.

கடைசியாக கட்டுமானத் துறையில் ரூ.9,322 கோடியும், மருத்துவத் துறையில் ரூ.9,048 கோடி மதிப்பிலான பங்குகளும் விற்பனையாகியுள்ளன. உள்நாட்டில் மந்தமான காலாண்டு முடிவுகள், வெளிநாடுகளில் வர்த்க போர், ராணுவ தாக்குதல் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பாதிப்பை முதலீட்டாளர்கள் குறைக்கும் உத்தி தான் இது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், FIIs நான்கு மாதங்களில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து நெட் செல்லராக இருந்தனர். ஜனவரியில் ரூ.78,027 கோடி, பிப்ரவரியில் ரூ.34,574 கோடி, மற்றும் ஜூன் 15 வரை ரூ.5,404 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனையாகியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் சந்தை மீண்டு வந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடனே முதலீடு செய்து வருகின்றனர்.

FII முதலீட்டாளர்கள் இக்காலக்கட்டத்தில் பங்குகளை விற்க மட்டும் சில துறையில் பங்குகளை வாங்கவும் செய்துள்ளனர். அந்த வகையில், இக்காலக்கட்டத்தில் FII முதலீட்டாளர் தொலைத்தொடர்பு துறையில் சுமார் ரூ.23,065 கோடி முதலீடு. இதேபோல நிதித்துறையில் ரூ.9,456 கோடி முதலீடு செய்துள்ளது.

FII முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றினாலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் (DIIs) தொடர்ச்சியான ஆதரவு சந்தையை உறுதியாக வழிநடத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+